Posts

Showing posts from 2025

மனம் மயங்கும் மழைக்காலம் 🌧☁️🌨⛈️ ( The enchanting rainy season 🌨☁️🌧⛈️)

Image
ஊரில் வெப்பநிலை மிகக்கடுமையாக இருப்பதால் தீபாவளி விடுமுறைக்கு தங்களை குளிர்பிரதேசங்களுக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது அழைத்து செல்ல வேண்டும் என்று போர்கொடி தூக்கினர் என் மனையும் மகளும். ஒப்புக்கொண்ட நானும் பலவற்றை ஆராய்ந்து மேற்கு மலை தொடர்ச்சியில் அமைந்த மேகங்கள் தவழும் மேகமலை ,தேக்கடி , வாகமன் போன்ற இடங்களுக்கு போகலாமா என பலவாறாக குழம்பி கொண்டிருந்தேன் . அப்போதுதான் அந்த அறிவிப்பு வந்தது , வடகிழக்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக தென் தமிழகங்களில் பரவலாக மழை பெய்ய வாய்பிருப்பதாக. ஏற்கனவே எங்கே செல்வது என்ன செய்வது போன்ற எண்ணங்களால் அலைக்கழிந்த மனதுடன் இருந்த எனக்கு , இந்த அறிவிப்பு மேலும் குழப்பத்தை விளைவித்தது .இதை பற்றி என்னவளிடம் கலந்தாலோசித்தேன். புலி வருது ...புலிவருது ... என்று புளிப்பு காட்டுபவர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என்று பழிப்பு காட்டினார்.. வருடம் தோறும் வராமல் போகும் வடகிழக்கு பருமழையை நம்பி தைரியமாக பயணிக்கலாம் என்பது நம்பியவளின் நம்பிக்கை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை  மூடிய பிறகு வானிலை மாறி , மாரி மாறாமல் பெய்வதை கவன...

நாட்டமற்ற நாய் அனுபவம் (Unpleasant dog experience )

Image
அவர்களிடம் அவமானப்படுவதே வழக்கமாகிப் போனது . . பொது இடம் என்று பாராமல் பலர் முன்னிலையில் வாயை திறந்து உதட்டை சுளித்து நாக்கை நீட்டி பற்கள தெரிய அவர்கள் என்னை நோக்கி கத்தும் போது முடி முதல் அடிவரை அங்கமெல்லாம் ஆட்டம் கண்டு விடுகிறது . ஒற்றை ஊசிக்கு பயந்து ஆஸ்பத்திரியிலிருந்து அடிப்பட காலோடு வடக்கு ஆத்தூர் மெயின்ரோட்டில் தலை தெறிக்க ஓடியவன் நான் . நாற்பது ஊசி அதுவும் தொப்புளை சுற்றி என்றால்! நினைக்கவே அச்சமாக இருக்கிறது ..  வீட்டில் வளர்க்கும் பிராணிகள் மீது எனக்கு ஆர்வம் கிடையாது.. அதிலும் நாய்கள் என்றாலே ஒரு விதமான ஒவ்வாமைதான். சிறுவயதில் குட்டி நாய் கடித்தற்கு பார்த்த பாட்டி வைத்தியம் எளிமையானது தான் ஆனால் இழந்தவைகள் அதிகம் .   பத்திய சோறுதான் பதினெட்டு நாட்களுக்கு . கத்தரிக்காய் , முருங்கைக்காய் போட்டு அம்மா வைத்திருக்கும் மணக்கும் கருவாட்டு குழம்பை சாப்பிட முடியாது , வீட்டில் சமைத்த அடுப்பில் கிடக்கும் கங்கில் (கனல் ) சுட்ட சால கருவாட்டை கும்பாவில் உற்றிய கஞ்சியோடு சேர்த்து சுவைக்க முடியாது. அச்சமயம் ஊருக்குள எழவு விழுந்திட்டா நம்மல பெட்டி கட்டிறுவ...

பரம்பரையும் பனையும் ( Inheritance and palm )

Image
பனை அது வெறும் மரமன்று ஒரு பெறும் சமூகத்தின் வாழ்க்கை . மூவேந்தர்களில் சேர மன்னரின் குடிப் பூவாக வெள்ளையும் மஞ்சளும் கலந்த பனம்பூ இருந்திருக்கிறது. சேர மன்னர்களின் காசுகளில் பனை மரம் பொறிக்கப்பட்டுள்ளது. பனைமரமே சேரர்களின் காவல் மரமாக போற்றப் பெற்றது. பறம்பு மலையை ஆண்ட வேளிர் தலைவன் பாரியின் குடிமரமாக பனை இருந்திருக்கிறது. தற்போதைய தமிழ்நாடும் இலங்கையும் இணைந்து குமரியாற்றுக்கு புறம்பாய் விரிந்து கிடந்த தென்னிலப் பகுதிக்கு குறும்பனை நாடு என்ற பெயருண்டு இங்கு பஃறுளியாறு என்ற ஆறும், குமரிக்கோடு என்ற பன்மலையடுக்கத்து மலைத்தொடர் ஒன்றும் இருந்தன. அக்காலத்தில் வாழ்ந்திருந்த தொல்காப்பியர் பனை மரமன்று அது புல்லெனப்படும் என்கிறார். மூங்கில் ,தென்னை ,பாக்கு போலப் பனை புல்லினத்தைத் சேர்ந்ததாகும். நீண்டு உயர்ந்து வளர்வதை மரம் என்று அழைக்கும் தமிழ் மரபுப்படி பனையை மரம் என்று அழைக்கின்றோம். பனை, போந்தை, பெண்ணை என்று இதன் வேறு பெயர்களை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. கடல்கோளால் அழிந்து போன அந்த நிலப்பரப்பில் பெரும் பனை கூட்டம் இருந்திருக்க கூடும் . அதன் எச்சமாக இப்போதும் இலங்கை மற்...

நாவில் நின்ற நாவல் பழச்சுவை ( A java plum fruit flavor lingering on the tongue )

Image
ஊருக்கு வரும் போதெல்லாம் அந்தந்த (சீசன்) பருவகாலங்களில் விளையும் உணவுவைச் தேடிச் சுவைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு உணவுக்கும் தனிச்சுவை உண்டு , நான் சிறுவயதில் சுவைத்த அந்த உணவுகளில் பல  தற்போது கிடைத்தாலும் சிலவை கண்ணில் அகப்படுவதில்லை .. இந்த மே மாதம் ஊருக்கு வந்த போது மஞ்சள் , சிவப்பு நிறங்களில் கொல்லாம் பழம் கிடைத்தது. (https://youtube.com/shorts/kl1NF8DrvWE?si=i3_XkWC_3myFZCyn)  அதிக சாறுடன் துவர்ப்புப்சுவை நிறைந்த கனி அது . எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் செம்மண் தேரிக்காடுகளில் நிறைந்திருக்கும் கொல்லாம் மரங்களில் ( முந்திரி மரம், cashewnut ) ஏப்ரல் மே மாதங்களில் காய்த்து கிடக்கும் அவற்றை வேண்டமட்டும் பறித்து சுவைக்கலாம், ஆனால் அவற்றின் விதைகளை மட்டும் அங்கே விட்டுவிட வேண்டும் என்பது அந்த காட்டின் உரிமையாளர்களின் கட்டுப்பாடு ஏன்னென்றால் அவை தான் cashewnut என்றழைக்கபடும் முந்திரிக்கொட்டைகள்.  அதே போல கொடுக்காப்புளி, வெள்ளரிக்காய், மாம்பழம் , வீட்டில் விளைந்த பப்பாளி மற்றும் நுங்கு , பதநீர் , பனங்கள்ளும் கிடைத்தன.. ...

"சமூகவிரோதிகள்" (" social enemies")

Image
                 கடலும் கடல் சார்ந்த நிலமும்  பாண்டிய மன்னர்களின் முக்கிய துறைமுகப் பட்டிணமான காயல்பட்டிணத்தின் அருகாமையில் , மழைநீர் வடிகால் சிற்றோடையின் கரையில் அமைந்திருந்த ஓடக்கரையில் உள்ள தாத்தாவின் வீட்டில் என் பள்ளி கால விடுமுறை நாட்கள் கழிந்தன.. நெல் வயல்கள் , வெற்றிலை கொடிக்கால் , வாழை என செழிப்பான ஈரநிலத் தாவரங்களும் , நன்னீரும் , வளமான வண்டல் மண்ணலால் நிறைந்த வயலும் வயல் சார்ந்த வாழ்வியலில் வளர்ந்த எனக்கு . கணுக்கால் புதைய வெண்பட்டு போன்ற பரந்த மணல் பரப்பில் ஒடை காடும் ,பனங்காடும், கற்றாழை செடிகளும், வேலிக்கு காவலாய் பசுமையான இலைகளும் வாய் விரிந்த மஞ்சள் பூவும் பம்பரக் காயுமாக நிற்க்கும் பூவரசு மரங்களும், பதியும் மணல் தரையில் செல்வதற்கு ஏதுவாக கார் டயர்கள் பொருத்திய மாடு வண்டியும், சுற்றிலும் உப்பு நீருமாக தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் மீது அமைந்திருந்த அந்த ஊரின் மாறுபட்ட அந்த சூழல் மிகவும் பிடித்தமானதாக இருந்தது .  காலையில் காடறிய காட்டுக்குள் நுழைந்தால் ஒடை புதர்களில் தேன்கூடு எடுப்பது ...

செங்கதிரோன் சேயோன்

Image
இரவெல்லாம் கண்ணயர்ந்த கதிரவன் விடியலில் தன் சிவந்த கண் திறந்து வானில் மிதக்கும் வெண்பஞ்சு மேகங்களின் மீது விளைவிக்கும் வண்ணக் கோலங்களை காணுகையில் , பிரம்மிக்க வைக்கும் இநத பிரமாண்ட பிரபஞ்சத்தின் முன் நான் என்னும் மமதை மரணித்து , சிறு துரும்பாக நாம் நிற்க்க , இந்த நீலக்கோள் அண்டம் நம்மை நோக்கி நெருங்குவதாக தோன்றும் அந்த வானத்தரசன் வங்கக் கடலில் குளித்து , முகத்தில் தீக்களி பூசி , செங்காந்தழாய் மலர்ந்து, ..கதவின் மறைவில் நின்று கண்ணசைக்கும் காதலியை போல மெல்ல மெல்ல இவ்வுலகை எட்டி பார்க்கும் அழகான இளம் காலையில்.. செம்மண்ணுக்குள் இருந்து பூவெளி வந்த இளமஞ்சளை அரைத்து பூசியது போல மெனியெல்லாம் அவனின் மஞ்சள் கதிர்கள் படர .. ஆதவன் எனும் ஆண்பாலுக்குள் மறைந்திருக்கும் பெண்பால் வெளிப்படும்...   அவ்வேளையில் கதிர் அவனை கட்டியனைக்க தோன்றும், கண் சிறைக்குள் கட்டிப் போடவும் தோன்றும். முத்தமிட தோன்றும் , நினைவுக்குள் அவனை மூழ்கிவைக்க தோன்றும் .. ஆனால் அவனோ நம்மை மெஸ்மரிசம் செய்து , மெல்ல கண்ணயர வைத்து , கணநேரத்தில் கையெட்டா உயரம் தாவிச் சென்றிடுவான். அதிசயமா இது ? இல்லை இதை அதிசயத...

ஆழ்கிணறும் ஆழ் மனமும்

Image
குழாயை திறந்தால் தண்ணீர் பொல பொலன்னு கொட்டுறதெல்லாம் இந்த காலம் .. பங்காளிங்க எல்லாம் ஒன்னா ஒரே தெருவுல குடியிருந்தாலும்.. வீட்டுல புழங்க தண்ணி எடுக்க ஒரு கிணறு வெட்டாமத்தான் இருந்தாங்க நூற்றாண்டு காலமா.. வீட்டுல ஆடு மாடு கோழின்னு வளர்த்தாலும் அதுகளுக்கு தாகத்துக்கு தண்ணீர் ஊத்த , அடுத்தவுக வீட்டுக்கும் அடுத்த தெருவுக்கும் போக வேண்டியதாக இருந்தது ..  கிணறு வெட்டுறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லலா .. பாறை இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா, சிமெண்டு உறை இறக்க தேவையில்ல, ஆனா பொத பொதன்னு மண்ணு மட்டும் இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா சிமெண்டு உறை இறக்கனும் , இல்லன்னா ஊத்து மண்ணு உள்ள வந்து கிணத்த மூடிறும். கிணறு தோண்டுவது உடல் உழைப்போடு சேத்து அதிக செலவும் வைக்கிற பெருத்த கரைச்சபுடிச்ச வேல..  1978- ல் அம்மா இந்த குடும்பத்துக்குள்ள வாக்கப்பட்டு வர்ற காலம் வரைக்கும் , கிணறு தோண்ட ஒரு காலம் பொறக்கல...  1979 - ல் தை மாசம் ஒருநாள் பங்காளிங்க எல்லாம் கூடி , வீடுகளின் கொல்லை பக்கம் பங்காளிங்க எல்லாரும் புழங்குவதற்கு என விட்டிருந்த குடும்ப பொது இடத்தில் , வீட்ல உடைஞ்ச பழைய...