Posts

Showing posts with the label தாத்தா

காலம் ஒர் அற்புத ஆற்றல் மிக்க கருவி!

Image
அதிகாலையில் எழுந்து , வீட்டின் முற்றத்தில் அமைந்திருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற முத்துநாடார் , தொழுவத்தின் பரண் மேலிருந்த வைக்கோல் கட்டின் பிரியை சற்று தளர்த்தி இரு கைகள் நிறைய வைக்கோலை அள்ளி வந்து , மாட்டின் முன்னாலிருந்த சிறிய மூங்கில் தட்டியாலான அடைப்புக்குள் போட்டுவிட்டு , அருகில் இருந்த கழநீர் தொட்டிக்குள் , வீட்டில் இருந்த கழநீரோடு கொஞ்சம் தவிடையும் கலந்து வைத்து , முளைக்கம்பில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து அவற்றுக்கு தண்ணீர் காட்டிவிட்டு , தொழுவத்தை விட்டு வெளியே வந்து கை , கால்களை அழம்பி விட்டு , வீட்டின் முன் தாழ்வாரத்தில் இருந்த பெரிய திண்ணையில் தான் படுத்திருந்த பனைநார் கட்டிலில் வந்து அமர்ந்தார் .   தாழ்வாரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த அடுக்களையில் இருந்து , ஒரு செம்பு குவளையில் நீராகாரத்தை எடுத்து அதில் சிறிது உப்பை போட்டு , கலக்கி கொண்டு வந்து குடுத்தார் அவரின் மனையாள் காசியம்மா....   செம்பு குவளையை கையில் வாங்கியவர் . குவளை வாயில் படாமல் அன்னாந்தவாறு இரண்டு மடக்கு நீராகாரத்தை வாயில் உற்றி , கையிலிருந்த கருப்பட்டியையு...

கோடை விடுமுறையும் தாத்தா வீடும் !❤ ( Grandfather House in Summer Holidays ! )

Image
கோடை விடுமுறையை இந்த கால குழந்தைகள் எல்லாம் ஓவியப்பயிற்சி , நடனப்பயிற்சி , நீச்சல் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் சம்மந்தமான பயிற்சி வகுப்புகள் என பல வகையான கட்டண பயிற்சி வகுப்புகளுக்கு செல்கிறார்கள் .. ஆண்டு முழுவதும் பள்ளிகூடம் , டியூசன் என கற்றல் கற்றல் என மூளைகளில் அழுத்தம் திணிக்கப்பட்ட குழந்தைகள் .. மீண்டும் பாடத்திட்டம் சாராத பயிற்சி வகுப்புகளில் ( extra - curricular activity) திணிக்கப்படுகின்றார்கள் . மீண்டும் காலையில் எழுந்து அந்த வகுப்பு , இந்த வகுப்பு என்று அழைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள்  . இந்த காலத்து பெற்றோர்களை  பொருத்தவரை அவர்கள் குழந்தைகள் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் , அதுவும் வீட்டின் உள்ளேயே.. வீட்டை விட்டு வெளியே சென்றால்  வெயில் பட்டு சருமம் கருத்து விடும் என்ற கவலை வேறு .. ஒன்றை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் . நாம் வசிக்கும் தமிழ்நாடு இந்த பூமியில்  கடகரேகைக்கு அருகில் அமைந்துள்ள வெப்ப மண்டல பகுதி . சூரியனிடம் இருந்து வரும் புறஊதாகதிர்களில்  இருந்து நம்மை காப்பது நமது சருமத்தில் இருக்கும் மெலனின் என்னும் திசு . இந்த திசு தான...