போதை "ஆ" சாமி

மாலை ஆறு மணிக்கு எல்லாம் தாமிரபரணி ஆற்றை நோக்கி வானத்தில் வெடி போட்டு , நையான்டி மேளம் முழங்க அம்மனுக்கு அபிஷேகம் பண்ண புனித நீர் எடுத்து வரகிளம்பினாங்க ஊர்ல இருக்கிற ஆண்களில் பெரும்பாலோனோர் . அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசு இருக்கும் . அதற்கு முன்பு வரை ஊர்ல எல்லாரும் ஆத்துக்கு போகும் போது வீட்ல என்னை அங்கு போக அனுமதிப்பது இல்லை . இரவில் வெளிச்சம் இல்லாத ஆற்றங்கரையில் நான் தவறுதலாக ஆற்றுக்குள் இறங்கிவிட்டால் . நீச்சல் தெரிந்து இருந்தாலும் ஆழம் தெரியாத நீர் நிலைகளில் காலை விடுவது ஆபத்தானது . இதற்கு முன்பு இப்படி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன . எனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறி என்னை பயமுறுத்தி இருந்தார் அம்மா . நான் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வாய்காலுக்கு குளிக்க போவதால் என்னை தடுப்பதற்காக கூட அம்மா அப்படி சொல்லி இருக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த முறை என்னை ஆற்றுக்கு போக அனுமதித்தனர். முதல் முறை சாமி ஆடுவ...