"வாட்டர் டேங்கும் விலாங்கு மீனும்""

காலையில் கடைக்கு கிளம்பிய தாத்தாவிடம் அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசாவில், ஊருக்குள் இருந்த கடைக்கார தாத்தாவின் கடையில் அவரை படாத பாடுபடுத்தி , அவரிடம் திட்டு வாங்கி கொண்டு பார்த்து பார்த்து வாங்கி வந்த கண்ணாடி கோலிகுண்டுகளை எல்லாம் விளையாடி தோற்கும் நிலையில் இருந்த என்னிடம் வந்த என் நண்பன் மெதுவான குரலில். - " ஏல மீன்பிடிக்கப் போறேன் வர்றியா" என்றான். " எங்க போய் மீன் பிடிக்கபோற" என்றேன் . - "வாட்டர் டேங்குக்கு போய் மீன் பிடிக்கலாம் " என்றான். "வாட்டர் டேங்க்" என்றவுடன் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது . அது ஊரில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் அமைந்து இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீரேற்றும் பகுதி . தாமிரபரணி ஆற்றில் இருந்தும் ,ஆத்தூரான் கால்வாயில் இருந்தும் இராட்சத மோட்டார் மூலமாக உரிஞ்சப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆத்தூர் , ஆறுமுகநேரி , காயல்பட்டினம் , வீரபாண்டிபட்டினம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம...