Posts

Showing posts with the label கெடா கறி திருவிழா

திருவிழாவும் கிடா கறி விருந்தும் !

Image
                           திருவிழா என்றாலே கிடா கறி விருந்து இல்லாமல் நிறைவு கிடையாது . ஊர் திருவிழா ஊரே மணக்கும் கிடா கறி விருந்தோடு தான் நிறைவு பெறும் .. அன்று ஊரில் உள்ள அனைவர் வீட்டிலும் கெடாக்கறி வாசம் மூக்கை துளைக்கும். வெள்ளாட்டின் தலை ,நெஞ்சு எலும்பு ,இரத்தம் ,குடல் ,ஈரல் ,கால், மூளை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை இருக்கின்றது.  அதை அதற்கு ஏற்றவாறு சமைத்து அன்பாக பறிமாறுவதில் தான் அதன் தனித்துவம் இருக்கின்றது..    அப்போது எல்லாம் நிறைய வீடுகளில்  ஆடு வளர்ப்பார்கள் . எங்க வீட்டுல திருவிழாவுக்கு என  இரண்டு கிடா குட்டியை எங்க அப்பா சந்தையில இருந்து வாங்கி வந்து வீட்டில விட்டுருவாங்க. எங்க பகுதி விவசாய பூமி என்பதால், தினமும் அதுக்கு தேவையான வாழைப்பூ மற்றும் வாழை இலை ,தண்டு முதலியன எங்கள் தோட்டத்தில் இருந்துகிடைக்கும் .  இல்லையேன்றால் வெற்றிலை கொடிக்கால் வைத்து இருப்பவர்களிடம் சொன்னால் அகத்திக்கீரையை கொண்டு வந்து கொடுப்பார்கள் .  அவை அவற்றிற்கு போதுமான உணவாக இருக்கும் ....