Posts

Showing posts with the label வாய்க்கால்

எங்க ஊர் பெரிய வாய்க்கால்

Image
தமிழ்நாடு வெப்ப மண்டலத்தின் பகுதியாகும் . அதன் காரணமாக தமிழர்கள் நீராடும் வேட்கையுடையவர்கள் . சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் கண்மாய்களிலும் குளங்களிலும் கால்வாய்களிலும் குளித்தலில் ஆர்வம் காட்டுகின்றனர். சைவ , வைணவ பெருஞ்சமய நெறிகள் கிளர்ந்தெழுந்தபோது அவை நாட்டார் மரபின் வலிமையான அடிக்கூறுகளை தன்வயமாக்கிக் கொண்டன. அவற்றில் ஓன்று நீராடல் ஆகும் , வெப்பமண்டல மனிதர்களை போலவே அவர்கள் வழிபடும் சிவன் , திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளி(ர்)க்கின்றன.                      'குளித்தல்' என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும் . குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள் ; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல் ' என்பதே அதன் பொருளாகும் . 'குளிர்த்தல் ' என்ற சொல்லையே நாம் குளித்தல் எனத் தவறாகப் பயன்படுத்துகிறோம்.     தமிழகத்தில் பெரும்பான்மையான உழைக்கும்...

அப்பாவின் கண்டிப்பும், அன்பின் வெளிப்பாடே !

Image
                                                  அப்பா மிகவும் அன்பானவர் அதே நேரம் கண்டிப்பானவர்.  காலையில் கடைக்கு செல்பவர் , இரவில் நாங்கள் உறங்கும்  நேரத்தில் தான் வீட்டிற்கு வருவார்.  ஆதலால் அவரிடம் அதிகமாக தப்பு செய்து மாட்டி கொண்டது கிடையாது . வீட்டில் அம்மா தான் எங்களுக்கு படிப்பு சொல்லி தருவதில் இருந்து , எங்களை கண்டிப்பது வரைக்கும் . நான் வீட்டுக்குள் ஒரு நாளும் அடங்கி இருந்தது இல்லை .  நேரம் காலம் தெரியாமல் தெருவில் விளையாடுவதும் ஊரைச் சுற்றி வருவதும் வாடிக்கை . இப்பொழுது போல்  24 மணி நேரமும் தொலைக்காட்சிகள்  பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாத காலம் ,  அது ஊருக்குள் நாங்கள் எங்கு அழைந்து கொண்டு இருந்தாலும் , யாராவது ஒருவர் நம்மை கண்காணிக்கும் வகை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருந்தது. அதனால் ஊருக்குள் நாங்கள் சுதந்திரமாக சுற்றி வந்தோம் . சுதந்திரம் இருந்தாலும் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய ச...