அப்பாவின் கண்டிப்பும், அன்பின் வெளிப்பாடே !

அப்பா மிகவும் அன்பானவர் அதே நேரம் கண்டிப்பானவர். காலையில் கடைக்கு செல்பவர் , இரவில் நாங்கள் உறங்கும் நேரத்தில் தான் வீட்டிற்கு வருவார். ஆதலால் அவரிடம் அதிகமாக தப்பு செய்து மாட்டி கொண்டது கிடையாது . வீட்டில் அம்மா தான் எங்களுக்கு படிப்பு சொல்லி தருவதில் இருந்து , எங்களை கண்டிப்பது வரைக்கும் . நான் வீட்டுக்குள் ஒரு நாளும் அடங்கி இருந்தது இல்லை . நேரம் காலம் தெரியாமல் தெருவில் விளையாடுவதும் ஊரைச் சுற்றி வருவதும் வாடிக்கை . இப்பொழுது போல் 24 மணி நேரமும் தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாத காலம் , அது ஊருக்குள் நாங்கள் எங்கு அழைந்து கொண்டு இருந்தாலும் , யாராவது ஒருவர் நம்மை கண்காணிக்கும் வகை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருந்தது. அதனால் ஊருக்குள் நாங்கள் சுதந்திரமாக சுற்றி வந்தோம் . சுதந்திரம் இருந்தாலும் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய ச...