Posts

Showing posts with the label இருள்

"அள்ளும் அல்லும்"

Image
தேக்கு மரங்கள் அடர்ந்த தேக்கடியின் பெரியாற்று கரையில் கண்ணொளி புகாத காரிருள் கானகத்தில் கரும்பாறையில் மீது அமர்ந்து , இரவில் பூத்து மணக்கும் காட்டு அல்லி மலர்களின் வாசனையை நுகர்ந்தபடி , அம்மலர்களின் மகரந்தத்தை கவர்ந்து செல்லும் வண்டுகளின் ரீங்காரத்தை கேட்டபடி , காடுமுழுவதும் ஒளிரும் மினுக்கட்டான் பூச்சிகளின் வெளிச்சத்தில் பச்சையம் தேடி உன்னும் மான்களை பார்த்தபடி , நீண்டு நெடிய வளர்ந்த மரங்கள் , தவழ்ந்து வரும் மேகங்களை தங்கள் கிளைகளால் களைத்து விளையாடுவதை ,ஒளியாண்டு தூரத்தில் ஒளிரும் விண்மீன்களின் மங்கிய ஒளியில் கண்டபோது என் மனதை "அள்ளியது அல்லும்"    தினம் தினம் உருமாறி வரும் உலகில் இன்றும் தன் உருவில் மாறாமல் இருப்பது இருள் தான். இருண்ட கருவறையில் இருக்கும் இறைபோல், அடர்ந்த இருளுக்குள் உறைந்திருக்கிறது இந்த பேரண்டத்தின் ஜீவன். கருப்பை எனும் இருட்டுக்குள் நமக்கு கை கால்கள் முளைப்பது போல் , பூமியின் இருட்டுக்குள் கோடிக்கணக்கான விதைகள் முளைக்கின்றன , மரங்கள் தளிர்க்கின்றன, உயிர்கள் உருவாகின்றன. அதனால் தானா என்னவோ உடல் அயர்ச்சியடைந்து மீண்டும் தெள...