Posts

Showing posts with the label dogs

நாட்டமற்ற நாய் அனுபவம் (Unpleasant dog experience )

Image
அவர்களிடம் அவமானப்படுவதே வழக்கமாகிப் போனது . . பொது இடம் என்று பாராமல் பலர் முன்னிலையில் வாயை திறந்து உதட்டை சுளித்து நாக்கை நீட்டி பற்கள தெரிய அவர்கள் என்னை நோக்கி கத்தும் போது முடி முதல் அடிவரை அங்கமெல்லாம் ஆட்டம் கண்டு விடுகிறது . ஒற்றை ஊசிக்கு பயந்து ஆஸ்பத்திரியிலிருந்து அடிப்பட காலோடு வடக்கு ஆத்தூர் மெயின்ரோட்டில் தலை தெறிக்க ஓடியவன் நான் . நாற்பது ஊசி அதுவும் தொப்புளை சுற்றி என்றால்! நினைக்கவே அச்சமாக இருக்கிறது ..  வீட்டில் வளர்க்கும் பிராணிகள் மீது எனக்கு ஆர்வம் கிடையாது.. அதிலும் நாய்கள் என்றாலே ஒரு விதமான ஒவ்வாமைதான். சிறுவயதில் குட்டி நாய் கடித்தற்கு பார்த்த பாட்டி வைத்தியம் எளிமையானது தான் ஆனால் இழந்தவைகள் அதிகம் .   பத்திய சோறுதான் பதினெட்டு நாட்களுக்கு . கத்தரிக்காய் , முருங்கைக்காய் போட்டு அம்மா வைத்திருக்கும் மணக்கும் கருவாட்டு குழம்பை சாப்பிட முடியாது , வீட்டில் சமைத்த அடுப்பில் கிடக்கும் கங்கில் (கனல் ) சுட்ட சால கருவாட்டை கும்பாவில் உற்றிய கஞ்சியோடு சேர்த்து சுவைக்க முடியாது. அச்சமயம் ஊருக்குள எழவு விழுந்திட்டா நம்மல பெட்டி கட்டிறுவ...