Posts

Showing posts from 2026

பால்யமும் பாளை வண்டியும் ..

Image
​வார விடுமுறை இன்று. வானம் விடியற்காலையிலேயே விழித்து, முற்றம் தெளித்து, செடி கொடிகளுக்கெல்லாம் தண்ணீர் தெளித்திருந்தது. மழை காரணமாக இதமான காலைக் குளிர், மெத்தையில் குப்புறக் கவிழ்த்து எனை எழவிடாமல் சோம்பலைக் காட்டி, போர்வைக்குள் அழுத்திவிடப் பார்த்தது. ஆனால், ஏழாவது தளத்தில் படுக்கையில் கவிழ்ந்திருந்த என் காதுக்குள் காகம் கரையும் சத்தம் கேட்டு, தூக்கம் தொலைந்துபோனது. ​தினமும் ஆசுவாசமின்றி இயந்திரமாய் கடந்துபோகும் எந்நாளையும் போல் இந்நாளையும் கடந்துபோக விருப்பமில்லாமல், சோம்பலை முறித்து, போர்வையைச் சுழற்றி வீசிவிட்டு எழுந்தேன். இந்நாளுக்காகவே காத்திருந்த மாதிரி, குளிர்ந்த நான்கு பாட்டில் 'மீன்கொத்தி மார்க்' நுரைத்த சோடாவைக் குடித்த வயிறுபோல வீங்கி இருந்தது துவைக்க வேண்டிய துணிக்கூடை. அதை அப்படியே துணி துவைக்கும் இயந்திரத்தில் கொட்டி ஓடவிட்டு, பல நாட்களுக்குப் பிறகு சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன் காலாங் ஆற்றங்கரை பூங்காவை நோக்கி. ​ஊத்தட்டுமா போகட்டுமா என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்த கரிய மேகம், அழகிய காரிகை ஆற்றில் அலம்பி முகர்ந்து இடுப்ப...

"அள்ளும் அல்லும்"

Image
தேக்கு மரங்கள் அடர்ந்த தேக்கடியின் பெரியாற்று கரையில் கண்ணொளி புகாத காரிருள் கானகத்தில் கரும்பாறையின் மீதமர்ந்து , இரவில் இதழ்விரித்து மணக்கும் காட்டு அல்லி மலர்களின் வாசனையை நுகர்ந்தபடி , அம்மலர்களின் மகரந்தத்தை கவர்ந்து செல்லும் வண்டுகளின் ரீங்காரத்தை கேட்டபடி , காடுமுழுவதும் ஒளிரும் மினுக்கட்டான் பூச்சிகளின் வெளிச்சத்தில் பச்சையம் தேடி உன்னும் மான்களை பார்த்தபடி , நீண்டு நெடிய வளர்ந்த மரங்கள் தவழ்ந்து வரும் மேகங்களை தங்கள் கிளைகளால் களைத்து விளையாடுவதை ,ஒளியாண்டு தூரத்தில் ஒளிரும் விண்மீன்களின் மங்கிய ஒளியில் கண்டபோது என் மனதை "அள்ளியது அல்லும்"    தினம் தினம் உருமாறி வரும் உலகில் இன்றும் தன் உருவில் மாறாமல் இருப்பது இருள் தான். இருண்ட கருவறையில் இருக்கும் இறைபோல், அடர்ந்த இருளுக்குள் உறைந்திருக்கிறது இந்த பேரண்டத்தின் ஜீவன். கருப்பை எனும் இருட்டுக்குள் நமக்கு கை கால்கள் முளைப்பது போல் , பூமியின் இருட்டுக்குள் கோடிக்கணக்கான விதைகள் முளைக்கின்றன , மரங்கள் தளிர்க்கின்றன, உயிர்கள் உருவாகின்றன. அதனால் தானா என்னவோ உடல் அயர்ச்சியடைந்து மீண்டும் தெ...