Posts

Showing posts with the label பாபநாசம்

பாபநாசம் பரிச்சயமற்ற காட்டுப் பகுதியில்

Image
 நமது ஊரின் நீர் நிறைந்த குளத்தின் கரையோரம் , இரண்டு பக்கங்களும் மரங்கள் அடர்ந்த அந்த சாலையில், குளிர்ந்த காற்றை சுவாசித்துக்கொண்டே , மேனி சிலிர்க்க மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதே தனி சுகம் தான் .. வெளிநாட்டில் ஒற்றை அறைக்குள் அடைந்து கிடந்த எனக்கும் நான் வரும் வரை எனக்கா காத்திருக்கும் என்னவர்களுக்கும் அது தான் விருப்பம். ஊருக்கு வரும் போதெல்லாம் ஊர் சுற்றும் வகையில் அருகில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவது வழக்கம் . இந்த முறை எங்கு செல்லலாம் என கூகுளில் தேடியதில் அருகில் இருந்த மாஞ்சோலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன் . வீட்டில் இருந்த தம்பியும் , அவர் மனைவியும் எங்களுடன் இணைந்து கொண்டனர் .       அடுத்த நாள் காலையில்  ஊர் கோவிலில் கணபதி ஹோமம் வளர்த்து கிட்டு இருந்தாங்க. கோவில் கொடைக்கு கால் கோள் நடுதல் நிகழ்வுக்காக . கால்நட்டிய பிறகு வெளியூர் பயணங்களையும் , அங்கு சென்று தங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்ற சாஸ்த்திர ,சம்பிரதாயங்களில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டுல...