கடைக்குட்டி சிங்கம் .

சிறுவயதில் இருந்தே விடுமுறை நாட்களில் அப்பாவுடன் கடைக்கு சென்று வந்து கொண்டிருந்ததால் நான் தெற்கு ஆத்தூர் பஜாரில் பலருக்கும் பரீட்சியமான முகம் ஆகி போனேன் . அது சிலநேரங்களில் நல்லதாகவும் பலநேரங்களில் அதுவே கெட்டதாகவும் மாறி போகும். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் படித்த போது ஒருநாள் வகுப்பை கட் அடித்து விட்டு நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு திருவிழா பார்க்க சென்றேன் . அங்கு அப்பாவிற்கு நன்கு பழக்கமான ஒருவர் என்னை பார்த்திருக்கின்றார் நான் அதை கவனிக்கவில்லை. சில நாட்கள் கழித்து ஒருநாள் நான் அப்பாவுடன் கடையில் இருக்கும் போது வந்து தம்பி உன்னை அன்னைக்கு திருச்செந்தூர் கோவில் பக்கம் பார்த்த மாதிரி இருந்ததே என்று கூற. அதை கேட்டு அப்பா என்னை பார்த்து முறைக்க எனக்கு பில்டிங் மட்டும் அல்ல பேஸ்மென்டும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிட்டது. நான் சற்று சுதாரித்துக் கொண்டு அப்படி இருக்க வாய்பில்லை என முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி துண்டு போட்டு தாண்டாத குறையாக தாண்டி "பொய்மையும் வாய்மை யிடத்த...