Posts

Showing posts with the label உறவுகள்

மனித பிணைப்பு ..

Image
     சமுகத்தில் மனிதம் மறைய காரணம் அதன் அடித்தளமான குடும்ப உறவுகள் சிதைந்தது தான். பணம் சேர்க்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.   எனக்கு எப்பொழுதும் எதையோ தலையில் சமந்தபடி ஓடுவது போல ஒர் உணர்வு ... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அந்த சுமை எனும் பணம் தேவைப்படுகிறது. அது இன்றி சமுகத்தை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது...அந்த பயம் இந்த சமுகத்திடம் இருந்தே எனக்குள் திணிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து வெளிவர இயலவில்லை..   ஆனால் இந்த பாரத்தை தூக்கிச் சுமந்து  கொண்டு என் தந்தை நடந்ததாக நினைவில்லை .. அவரும் அவரைச்சார்ந்த மனிதர்களுமாக வெகு எளிதாக இந்த வாழ்கையை வாழ்ந்திருந்தார்கள்.. பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் அவர் ஓடியதில்லை... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அவருக்கு அது தேவைப்படவில்லை . அதை விட உயர்வான மனித மனங்களை சேர்த்து வைத்திருந்தார்.  புற்று நோயின் பாதிப்பில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அப்பா . வீட்டில் சிறு சேமிப்புகளும் இல்லாத நிலையிலும் .மிகச்சிறப்பாக நடத்தி முடிந்த என் மூத்த சகோதரி...