ஓலை குடிசை

காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை , புல்தரைகள் வேய்ந்த கூரை வீடுகளில் தான் வாழ்ந்தனர் . இவ்வீடுகளின் சுவர்கள் குடிசையாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும் ,சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. நான் பிறந்து வளர்ந்தது பனை ஓலையால் ஆன கூரையும், செங்கலும், களிமண்ணை குழைத்து கட்டப்பட்ட அந்த மூன்று அறை மண்மாளிகையில் தான் . ஓன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மழைக்காலம் வருவதற்கு முன்பு பழைய கூரையை மாற்றி புதிய கூரை வேய்வதே அவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும் . வடக்கு மரந்தலை மாடசாமி கோவிலுக்கு அருகில் எங்களுக்கு ஒரு பனங்காடு இருந்தது . அதில் பூமியின் கற்பகதரு என அழைக்கப்படும் பனைமரங்கள் பல இருந்தன . அந்த பனைமரத்திலிருந்து ஓலைகளை வெட்டி இரண்டு நாட்கள் வாடவிட்டு. பின்பு அவற்றை நீண்ட மயில் தோகை போல நீட்டுவாக்கில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து பெரியகல்லை அதன் மீது வைத்து விட்டால் . இரண்டு நாட்களி...