Posts

Showing posts with the label பிறந்தநாள் வாழ்த்து

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

Image
                                                          எப்போதும் வருவது அல்ல கவிதை.... எப்போதோ வருவது கவிதை..............   நினைத்தால்  வருவது  அல்ல கவிதை.. இதயம் கணத்தால் வருவது கவிதை.. என்று வலம்புரி ஜான் கூறிய  கவிதையின் இலக்கணத்தை போல ..  என் இதயம் மகிழ்ச்சியிலும் , காதலிலும் ,கவலையிலும் , கணத்தபோதெல்லாம், நான்  கிறுக்கியவற்றை கவிதை என்ற பெயரில்  தொகுத்து அதனுடன் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில்  நான் எடுத்த வண்ணப்படங்களையும் இணைத்து பார்வையாக்கி இருக்கின்றேன் .  என்றும் மாறாத அன்புடன் என்னவர்களுக்காக... 💌💌💌 அச்சுப்பதுமையாய் அகத்தில் நிறைந்தவள் .. 💝 மழையில் நனைந்த மல்லிக் கொடியின் பசுமையாய் மனதில் படர்ந்தவள் .. 💝 பாவையின் வழி காதலை கடத்தும்  பாங்கியவள்.  💝 தோளோடு தோடுரச கோலமிடும்  தோகையவள்.. 💝 நெய்தலின் நெடுங்கரை மடியின் பாக்கத்தில்...