Posts

Showing posts with the label கொடைக்கானல்

கொடைக்கானலில் திகில் நிறைந்த நிமிடங்கள் !!!🐺

Image
நான் என் மனைவி மகளுடன் 2020 புத்தாண்டு கொண்டாடுவதற்க்காக ,  கொடைக்கானல் சென்றிருந்தேன் .. கொடைக்கானல் ஏரி அருகில் உள்ள ஒரு விடுதியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தேன் .. நான் 8ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலா சென்ற போது ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து முதல்தடவையாக சென்றேன் . அதன் பிறகு இப்போது தான் . நான் தங்கி இருந்த விடுதி கொடைக்கானல் ஏரி அருகில் என்பதால் நிறைய சாலை ஓர உணவகங்கள் மற்றும் கடைகள் அதிகமாக இருந்தன . நான்  இரண்டாவது நாள் அதிகாலை 5 மணிக்கே விழித்து விட்டேன் . நல்ல குளிர் எனக்கு தேநீர் அருந்த வேண்டும் என்று தோன்றியது . நான் இருந்த இடம் நகரின் மைய பகுதி என்பதாலும் . அது ஒரு சுற்றுலா மையம் என்ற எண்ணத்திலும் கடைகள் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் தூங்கி கொண்டு இருந்த மனைவியையும் ,குழந்தையையும் அறையில் விட்டு விட்டு .. நான் மட்டும் தனியாக இறங்கி வெளியே வந்தேன் . ஒரு 100 மீட்டர் நடந்திருப்பேன் என்னைச் சுற்றிலும் ஒரு திகில் நிறைந்த இருட்டு சூழ்ந்து இருந்தது .அது தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாதலம் என்ற எந்த ஒரு தோற்றமும் இல்லாமல். சரியாக பராமரி...