Posts

Showing posts with the label அப்பா

காலம் ஒர் அற்புத ஆற்றல் மிக்க கருவி!

Image
அதிகாலையில் எழுந்து , வீட்டின் முற்றத்தில் அமைந்திருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற முத்துநாடார் , தொழுவத்தின் பரண் மேலிருந்த வைக்கோல் கட்டின் பிரியை சற்று தளர்த்தி இரு கைகள் நிறைய வைக்கோலை அள்ளி வந்து , மாட்டின் முன்னாலிருந்த சிறிய மூங்கில் தட்டியாலான அடைப்புக்குள் போட்டுவிட்டு , அருகில் இருந்த கழநீர் தொட்டிக்குள் , வீட்டில் இருந்த கழநீரோடு கொஞ்சம் தவிடையும் கலந்து வைத்து , முளைக்கம்பில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து அவற்றுக்கு தண்ணீர் காட்டிவிட்டு , தொழுவத்தை விட்டு வெளியே வந்து கை , கால்களை அழம்பி விட்டு , வீட்டின் முன் தாழ்வாரத்தில் இருந்த பெரிய திண்ணையில் தான் படுத்திருந்த பனைநார் கட்டிலில் வந்து அமர்ந்தார் .   தாழ்வாரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த அடுக்களையில் இருந்து , ஒரு செம்பு குவளையில் நீராகாரத்தை எடுத்து அதில் சிறிது உப்பை போட்டு , கலக்கி கொண்டு வந்து குடுத்தார் அவரின் மனையாள் காசியம்மா....   செம்பு குவளையை கையில் வாங்கியவர் . குவளை வாயில் படாமல் அன்னாந்தவாறு இரண்டு மடக்கு நீராகாரத்தை வாயில் உற்றி , கையிலிருந்த கருப்பட்டியையு...

கடைக்குட்டி சிங்கம் .

Image
     சிறுவயதில் இருந்தே விடுமுறை நாட்களில்  அப்பாவுடன்  கடைக்கு சென்று வந்து கொண்டிருந்ததால் நான் தெற்கு ஆத்தூர் பஜாரில் பலருக்கும் பரீட்சியமான முகம் ஆகி போனேன் . அது சிலநேரங்களில் நல்லதாகவும் பலநேரங்களில் அதுவே  கெட்டதாகவும் மாறி போகும்.  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் படித்த போது ஒருநாள்  வகுப்பை கட் அடித்து விட்டு நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு திருவிழா பார்க்க சென்றேன் . அங்கு அப்பாவிற்கு நன்கு பழக்கமான ஒருவர் என்னை பார்த்திருக்கின்றார் நான் அதை கவனிக்கவில்லை. சில நாட்கள்  கழித்து ஒருநாள் நான் அப்பாவுடன் கடையில் இருக்கும் போது வந்து தம்பி உன்னை அன்னைக்கு  திருச்செந்தூர் கோவில் பக்கம் பார்த்த மாதிரி இருந்ததே என்று கூற. அதை கேட்டு அப்பா என்னை பார்த்து முறைக்க எனக்கு பில்டிங் மட்டும் அல்ல பேஸ்மென்டும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிட்டது. நான் சற்று சுதாரித்துக் கொண்டு அப்படி இருக்க வாய்பில்லை என முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி துண்டு போட்டு தாண்டாத குறையாக தாண்டி  "பொய்மையும் வாய்மை யிடத்த...

அப்பாவின் கண்டிப்பும், அன்பின் வெளிப்பாடே !

Image
                                                  அப்பா மிகவும் அன்பானவர் அதே நேரம் கண்டிப்பானவர்.  காலையில் கடைக்கு செல்பவர் , இரவில் நாங்கள் உறங்கும்  நேரத்தில் தான் வீட்டிற்கு வருவார்.  ஆதலால் அவரிடம் அதிகமாக தப்பு செய்து மாட்டி கொண்டது கிடையாது . வீட்டில் அம்மா தான் எங்களுக்கு படிப்பு சொல்லி தருவதில் இருந்து , எங்களை கண்டிப்பது வரைக்கும் . நான் வீட்டுக்குள் ஒரு நாளும் அடங்கி இருந்தது இல்லை .  நேரம் காலம் தெரியாமல் தெருவில் விளையாடுவதும் ஊரைச் சுற்றி வருவதும் வாடிக்கை . இப்பொழுது போல்  24 மணி நேரமும் தொலைக்காட்சிகள்  பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாத காலம் ,  அது ஊருக்குள் நாங்கள் எங்கு அழைந்து கொண்டு இருந்தாலும் , யாராவது ஒருவர் நம்மை கண்காணிக்கும் வகை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருந்தது. அதனால் ஊருக்குள் நாங்கள் சுதந்திரமாக சுற்றி வந்தோம் . சுதந்திரம் இருந்தாலும் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய ச...