எனது ஊர் கோவில் கொடை விழா 🙏🙏💐❤

கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் நடப்பதாக இருந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்ள வழியே இல்லாததால் மனதில் கவலை படர்ந்து இருக்க என் சிந்தனை மெல்ல அந்த சுகந்தமான பழைய நினைவுகளை நோக்கி நகர்கின்றது .. முற்றிலும் விவசாய நிலங்களால் சூழப்பட்ட அழகிய கிராமம் தான் எனது ஊர் புன்னைசாத்தான்குறிச்சி . எங்கள் ஊரை காக்கும் அருள்மிகு முத்தாரம்மனுக்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் கோவில் கொடை விழா நடைபெறும் . முப்பது வருடத்திற்கு முன்பு வரை ஆவணி மாதம் முதல் இரண்டு செவ்வாய்கிழமைகளும் கொடை விழா நடக்கும் வசந்த காலங்கள்.. ஆனால் ஊர் மக்கள் பலர் தொழில் சார்ந்து பெருநகரங்களில் குடியேறியதால் , ஆவணி மாதம் நடக்கும் கொடைவிழாவில் தங்கள் குழந்தைகளின் கல்வியின் காரணமாக கலந்து கொள்ள முடியாத நிலை . அதனால் குழந்தைகளில் தேர்வு விடுமுறை மாதமான வைகாசியில் கொடைவிழா நடத்தினால் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று கருதியதன் காரணமாக ...