Posts

Showing posts with the label சேப்பியன்ஸ்

கடவுளின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் பங்கு.

Image
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழி கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் அறிவுப்புரட்சி உண்டானது . மொழி இல்லையென்றால்  மனிதனும் ஒரு  விலங்கை போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பான்.  விலங்குகளுக்கும் மொழி இருக்கின்றது . அதன் மூலம் நிகழ்காலத்தில் ஒரு சிங்கம் வருவதை எச்சரிக்கை ஒலி எழுப்பி தன் சக விலங்குகளை பாதுகாக்கமுடியும். ஆனால் மனிதர்களை போல  நிகழ்காலத்தில் மட்டும் அல்ல எதிர்காலத்திலும், இறந்தகாலத்திலும்  நடப்பவற்றை, நடக்கபோவதை, நடந்ததை கற்பனை கலந்து கூறமுடியாது. மனிதனால் அங்கே ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் அருகில் ஒரு சிங்கத்தை பார்த்தாக கூறமுடியும் . ஆனால் விலங்குகளால் அது முடியாது. அந்த திறன் தான் மனிதனின் மொழிக்குரிய தனித்துவமான அம்சமாகும். மனிதன் தனக்கு தெரிந்தவற்றை ,தான் ஒரு போதும் பார்த்திராத, தொட்டிராத, முகாந்திரமில்லாத ஏராளமான விஷயங்களை பற்றி பேசுவதற்கு மனிதர்களால் முடியும் .முன்பு ஒரு சிங்கம் வருகின்றது என்று எச்சரிக்கை மட்டும் தான் கூறமுடிந்தது.  அறிப்புரட்சியின் விளைவாக சிங்கம் தான் நம் இனத்தின் காவல் தெய்வம் என்று கூறுவதற்கான திறனை ...