தீபாவளியும் , விநாயகர் சதுர்த்தியும் நான் அறிந்தது .

எனக்கும் என்னவளுக்குமான சிறு உரையாடல் . என்னவள் சென்னை அருகில் உள்ள மடிப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . தற்போது இந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு பகுதியாக உள்ளது . என்னவள் அவருடைய தோழியிடம் தான் சென்னையில் இருந்த வரைக்கும் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடியதாகவும். தற்போது ஆத்தூரில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலை வாங்க பல இடங்களில் அழைந்து திரிந்தும் அவை கிடைக்கவில்லை என்றும் கூறியதாகவும் . அதற்கு அவரின் தோழி நமது ஊரில் விநாயகர் சதுர்த்தி பிரபலமாக கொண்டாப்படுவதில்லை என்றும் கூறியதாகவும் என்னிடம் கூறி . உங்க ஊரில் எதுவுமே கிடைப்பதில்லை என்று என்னை வம்புக்கு இழுத்தார் . நான் என்னவளிடம் விளக்கம் கூற ஆரம்பித்தேன் . விநாயகர் வழிபாடு மராட்டியத்தில் புனே நகரைச் சேர்ந்த சித்பவனப் பிராமணர் இடையே தோன்றியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . பின்னர் கீழைசாளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலை கொண்டு அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் வந...