Posts

Showing posts with the label புன்னைச்சாத்தான்குறிச்சி

ஆழ்கிணறும் ஆழ் மனமும்

Image
குழாயை திறந்தால் தண்ணீர் பொல பொலன்னு கொட்டுறதெல்லாம் இந்த காலம் .. பங்காளிங்க எல்லாம் ஒன்னா ஒரே தெருவுல குடியிருந்தாலும்.. வீட்டுல புழங்க தண்ணி எடுக்க ஒரு கிணறு வெட்டாமத்தான் இருந்தாங்க நூற்றாண்டு காலமா.. வீட்டுல ஆடு மாடு கோழின்னு வளர்த்தாலும் அதுகளுக்கு தாகத்துக்கு தண்ணீர் ஊத்த , அடுத்தவுக வீட்டுக்கும் அடுத்த தெருவுக்கும் போக வேண்டியதாக இருந்தது ..  கிணறு வெட்டுறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லலா .. பாறை இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா, சிமெண்டு உறை இறக்க தேவையில்ல, ஆனா பொத பொதன்னு மண்ணு மட்டும் இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா சிமெண்டு உறை இறக்கனும் , இல்லன்னா ஊத்து மண்ணு உள்ள வந்து கிணத்த மூடிறும். கிணறு தோண்டுவது உடல் உழைப்போடு சேத்து அதிக செலவும் வைக்கிற பெருத்த கரைச்சபுடிச்ச வேல..  1978- ல் அம்மா இந்த குடும்பத்துக்குள்ள வாக்கப்பட்டு வர்ற காலம் வரைக்கும் , கிணறு தோண்ட ஒரு காலம் பொறக்கல...  1979 - ல் தை மாசம் ஒருநாள் பங்காளிங்க எல்லாம் கூடி , வீடுகளின் கொல்லை பக்கம் பங்காளிங்க எல்லாரும் புழங்குவதற்கு என விட்டிருந்த குடும்ப பொது இடத்தில் , வீட்ல உடைஞ்ச பழைய...

குழந்தை இலக்கியம்

Image
"முடிவற்ற  உலகங்களின்  கடற்கரையில் குழந்தைகள் கூடுகின்றன . எல்லையற்ற ஆகாயம் மேலே  சலனமற்று இருக்கிறது . முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொணடும் ஆனந்தக் கூத்தாடிக் கொணடும் குழந்தைகள் கூடுகின்றன. குழந்தைகள் தங்கள் வீடுகளை மணலினால் கட்டுகின்றன; வெறும் சிப்பிகளை வைத்துக்கொண்டு விளையாடுகின்றன; உலர்ந்த சருகுகளைக் கொண்டு ஓடம் முடைகின்றன ; அகண்ட ஆழ்ந்த கடலிலே ஆனந்தமாக அவற்றை மிதக்க விடுகின்றன. "  - தாகூர்     எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று அனைவரும் எண்ணி எண்ணி மகிழும் நம் குழந்தை பருவத்தை போல இப்போது இருக்கும் குழந்தைகளின் நிலை இல்லை என்றே நினைக்கின்றேன் கொட்டாங்குச்சி, பட்டம் , ஓலை காத்தாடி, களிமண்ணு, பால்சிப்பி,பானை சட்டி , உடைமரப் பூ, ஊமத்தம்பூ, பொய் கடுகு , பனங்காய் , தென்னை மட்ட, வாழைதண்டு ,பொடி தட்டை, சீகரெட் அட்டை , தீப்பெட்டி மட்டி , தகர டப்பா ,  பட்டுப்பூச்சி,  தட்டான்பூச்சி , தண்ணிப்பாம்பு, தாவும் தவளை , காட்டுச்செடி, காக்கா முட்டை , ஓணான்,  அணில் கூடு , கொக்கு குஞ்சி , ஓடை நத்தை , வயல் வரப்பு , தோட்டம...

எங்கள் ஊர் மாசி மாத மகா சிவராத்திரி .

Image
தமிழ்நாட்டின் சமூக பண்பாட்டை பேசிய அறிஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்த மதுரையே தமிழ்நாட்டின் பண்பாடு என்பதோடு  அமைந்து விடுகின்றனர் . ஆயினும் மதுரைக்கு தெற்கே பல நூறு கி.மீ வரை தமிழ்நாடு பரந்த நிலப்பரப்பினையுடையது என்பதை போதிய அளவில் கணிக்க முயலாமல் விட்டுவிட்டனர் .          அந்த பரந்த நிலப்பரப்பில் இயற்கையின் அரணாக திகழும்  பொதிகை மலையில் உருவாகி முன்பு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்து . தற்போது தென்காசி ,திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்கள் என பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பகுதி வழியாக பாய்ந்து செல்லும் இடம் எல்லாம் பசுமையை பெருக்கி வளர்க்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியின்  கரையில் தான் பண்டைய தமிழரின் தொல் சமய,பண்பாட்டினை உள்வாங்கி வளர்ந்த சைவ , வைணவத்தின் முக்கிய திருத்தலங்களான நவ கைலாசமும் , நவ திருப்பதியும்  அமைந்துள்ளன. அந்த பழைய மதங்கள் காட்டும் ,  கார்த்திகை , திருவாதிரை , மாசிகளரி மற்றும் மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம் , சித்திரை பிறப்பு , வைகாசி விசாகம் , ...