நடையில் பயின்றது..
உடல் எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யுங்கள் , இல்லையென்றால் உடல்நிலையில் தேவையற்ற தொந்தரவுகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும் என்ற மருத்துவரின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக கைப்பேசியில் அலாரம் வைத்து அதிகாலை 7 மணிக்கெல்லாம் பாதி தூக்கத்தில் விழித்து , வாக்கிங் போவதற்க்கென வாங்கி வைத்திருந்த ஷூவை எடுத்தேன், அது பதிமூன்றாம் நம்பர் வீடு என்ற பேய் படத்தில் வரும் பாதாள அறையை அப்போது தான் திறப்பது போன்று ஓட்டடையும் தூசுமாக இருந்தது .. அதை எடுத்து வேண்டா வெறுப்பாக கஷ்டப்பட்டு துடைப்பதற்குள் நன்கு வியர்த்து விட , ஆகா இதுவே பத்தாயிரம் காலடிகள் நடந்துபோல இருக்கே, இதுக்கு மேல் எதற்கு நடக்க வேண்டும் , தினமும் ஷூவை எடுத்து நன்றாக துடைத்தாலே போதும் போலவே , இதுவே பெரிய உடற்பயிற்சியாக இருக்கு இதற்கு மேல் எதுக்கு நடைபயிற்சி என்று மனது அலைபாயந்த போது... சோம்பேறி ... சோம்பேறி என்றது உள்மனது, என்னை விட அதுக்கு தான் என் உடல்நலனை காப்பதில் அக்கறை அதிகம்.. சரி.. சரி .. திட்டாதே என்று உள்மனதை சமாதனபடுத்திக்கொண்டு .. வேண்டா வெறுப்பாக ஷூவை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் சில்ல...