விவசாயிகளின் நண்பனை நம்பமுடிவதில்லை. . .

நீர் நிறைந்த நிலத்தில் வாழை தோட்டங்களும் , வெற்றிலை கொடிக்கால்களுமாக செழுமை செறிந்த நிலப்பரப்புகளுக்கு நடுவே அமைந்த எங்கள் கிராமத்தை சுற்றி இருக்கும் குளிச்சியான தோட்டங்களில் தவளைகள் , வயல் எலிகள் அவற்றை உணவாக உண்ணும் பாம்புகளும் நிறைந்து இருந்தன . பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவை . அவை மனிதர்களை தேடிவந்து கடிப்பதில்லை. அவற்றுக்கு ஆபத்து என்று உணரும் போது அவை தாக்க முயல்கின்றன. பொதுவாக பாம்புகள் மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன . வயல்வெளிகளில் பாம்புகள் எலிகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. ஆனாலும் சில நேரம் அவற்றினால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது மக்களுக்கு அவற்றை கண்டால் பயமும் , கொல்லவும் முயல்கின்றார்கள். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் மெயின் பஜாரில் இருந்து எங்கள் ஊருக்கு செம்மண்கலந்து சிறு சரல் கற்களை கொட்டி அமைக்கப்பட்டு இருந்த அந்த இருபது அ...