Posts

Showing posts with the label briyani

"பிரியாணி"

Image
  பிரியாணி எனக்கு அறிமுகமானது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் தெற்கு ஆத்தூர் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தான் . அன்று பஜார் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் . பஜார் வியாபாரிகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும் , சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்கவும் கடைகாரர்கள் அனைவரும் கூடும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொள்ளாத கடைக்காரர்கள் கூட கடைசியாக கூட்டம் முடிந்தவுடன் ஆத்தூர் தாஜ்மஹால் ஓட்டலில் ஆர்டர் செய்து இலவசமாக வழங்கப்படும் பிரியாணியை வாங்க ஆவலாக வந்து இருப்பார்கள் . "தாஜ்மகால்" என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அன்பு , லவ் , பியார் , காதல்னா , ஆத்தூர்காரங்களுக்கு "தாஜ்மகால்" என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்கும் .சீரக சம்பா அரிசியோடு ஏலக்காய் , பட்டை , கிராம்பு போன்ற வாசனை பொருட்களையும், சிக்கனையும் , நெய்யையும் ஊத்தி ஊரே மணக்கும் வாசனையுடன் செய்த தாஜ்மகால் ஓட்டல் பிரியாணி அவ்வளவு ருசியாக இருக்கும் . அந்த பிரியாணியை நியூஸ் பேப்பரை விரிச்சி வைச்சி அது மேல இளம் தலை வாழையிலையை போட்டு சிக்கனைய...