Posts

Showing posts with the label இயற்கை

எனது ஊரும் இயற்கையோடு வாழ்ந்த வாழ்வும் !

Image
          இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வியலின் அழகான தருணங்களை நினைத்து பார்க்கின்றேன் . எங்கள் ஊர் புன்னைச்சாத்தான்குறிச்சி 100க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட இயற்கை சூழ்ந்த அழகிய கிராமம்.  எங்கள்  ஊரைச் சுற்றிலும் நெல்வயல்களும் , வெற்றிலை கொடிக்காலும்,  வாழைத் தோட்டங்களுமாக விவசாய நிலங்களும் ,  ஊரின்  வடக்கு பக்கம் ,  ஸ்ரீவைகுண்டம்  தாமிரபரணி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள அணையின் பிரதான தென்கால் கீழ் உள்ள கடையனோடை மதகு மூலமாக ஆத்தூர் குளத்துக்கு தண்ணீர் வரும் ஆத்தூரான் வாய்க்காலும், வாய்க்கால் ஒரத்தில் மிகப்பெரிய அரச மரமும் , ஆலமரமும் உள்ளது . ஊரைச்சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் சமதளமான மணற்பரப்பில் இருந்து குறைந்தது ஒரு பத்து அடி பள்ளத்தில் தான் அமைந்து இருக்கின்றது . வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் , சுலபமாக விவசாய நிலங்களில் பாய்வதற்கு ஏதுவாக , சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னோர்கள் உழைத்து உருவாக்கிய அமைப்பு இது .         எங்கள் ஊரின் நிலவியல் அமைப்பே ஆச்...