கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )
எப்போதும் வருவது அல்ல கவிதை.... எப்போதோ வருவது கவிதை.............. நினைத்தால் வருவது அல்ல கவிதை.. இதயம் கணத்தால் வருவது கவிதை.. என்று வலம்புரி ஜான் கூறிய கவிதையின் இலக்கணத்தை போல .. என் இதயம் மகிழ்ச்சியிலும் , காதலிலும் ,கவலையிலும் , கணத்தபோதெல்லாம், நான் கிறுக்கியவற்றை கவிதை என்ற பெயரில் தொகுத்து அதனுடன் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில் நான் எடுத்த வண்ணப்படங்களையும் இணைத்து பார்வையாக்கி இருக்கின்றேன் . என்றும் மாறாத அன்புடன் என்னவர்களுக்காக... வனப்பு மிகு தமிழ் நிலமதில் ! தன்னியல்பு மாறாமல் ஓடும் , தண்பொருநையின் கரையில் .. என்னியல்பு கொண்டு பிறந்த மகளே ! மதி மூடும் பொய்மையிருளகள ! ஐயம் தவிர்த்து அச்சம் ஓழித்தலை, உன்னியல்பாய் கொண்டு , வாகை சூட வாழ்த்துகிறேன் .. அன்பு...