மழைக்காட்டுக்குள் நடைப்பயிற்சி !🏃♂️

சிங்கப்பூரின் 56 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . கொரோனா காரணமாக அணிவகுப்பு நிகழ்ச்சிகளை யாருக்கும் நேரடியாக கண்டுகளிக்க அனுமதி இல்லை . ஆதலால் என் அண்ணன் என்னை அவர்களுடன் நடைபயிற்சியில் கலந்து கொள்ள அழைத்தார்கள் . எனக்கும் விடுமுறை ஆதலால் அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். நாங்கள் நடைபயிற்சி கொள்ள அண்ணன் தேர்ந்து எடுத்த இடம் மெக்ரிட்சி நீர்தேக்கம் ஆகும் . உயரமான கட்டிடங்கள் , அவற்றுக்கு இடையில் சாலைகளில் வேகமாக செல்லும் புதுப்புது உயர்ரக கார்கள் , அவற்றின் கீழ் பல அடுக்கு சுரங்கங்களில் விரைவாக பயணிக்கும் தானியங்கி இரயில்கள் என மேம்பட்ட இயந்திரத்தனமாக காட்சி அளிக்கும் சிங்கப்பூரில் .. இவை எதுவும் இல்லாமல் வாகனங்களின் ஓசை சிறிதும் இன்றி சிள்வண்டுகளின் ரிங்காரத்தின் ஓசைகள் மட்டும் கேட்டு கொண்டு இருக்கும் , மிகப்பெரிய மழைக்காடுகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு அமைந்துள்ள சிங்கபூரின் மிகப்பெரிய நீர்தேக்கம் தான் முன்பு தாம்சன் நீர்தேக்கம், ...