நாவில் நின்ற நாவல் பழச்சுவை ( A java plum fruit flavor lingering on the tongue )
ஊருக்கு வரும் போதெல்லாம் அந்தந்த (சீசன்) பருவகாலங்களில் விளையும் உணவுவைச் தேடிச் சுவைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு உணவுக்கும் தனிச்சுவை உண்டு , நான் சிறுவயதில் சுவைத்த அந்த உணவுகளில் பல தற்போது கிடைத்தாலும் சிலவை கண்ணில் அகப்படுவதில்லை .. இந்த மே மாதம் ஊருக்கு வந்த போது மஞ்சள் , சிவப்பு நிறங்களில் கொல்லாம் பழம் கிடைத்தது. (https://youtube.com/shorts/kl1NF8DrvWE?si=i3_XkWC_3myFZCyn) அதிக சாறுடன் துவர்ப்புப்சுவை நிறைந்த கனி அது . எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் செம்மண் தேரிக்காடுகளில் நிறைந்திருக்கும் கொல்லாம் மரங்களில் ( முந்திரி மரம், cashewnut ) ஏப்ரல் மே மாதங்களில் காய்த்து கிடக்கும் அவற்றை வேண்டமட்டும் பறித்து சுவைக்கலாம், ஆனால் அவற்றின் விதைகளை மட்டும் அங்கே விட்டுவிட வேண்டும் என்பது அந்த காட்டின் உரிமையாளர்களின் கட்டுப்பாடு ஏன்னென்றால் அவை தான் cashewnut என்றழைக்கபடும் முந்திரிக்கொட்டைகள். அதே போல கொடுக்காப்புளி, வெள்ளரிக்காய், மாம்பழம் , வீட்டில் விளைந்த பப்பாளி மற்றும் நுங்கு , பதநீர் , பனங்கள்ளும் கிடைத்தன.. ...