Posts

ஊர்க்கிணறு

Image
          இயற்கையின் எளிமையுடன் தொடர்பு கொண்ட அமைதியான கிராமத்து வாழ்வு அழகானது. அங்கு வசிக்கும் மனிதர்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறை வழக்கங்களில் ஒவ்வொன்றிலும் அழகியல் இருந்தது . கோவிலும் கோவில் சார்ந்த திருவிழாக்களும் என ஒர் அழகு , விவசாய நிலங்களும் அது சார்ந்த வேலைகளும் ஒர் அழகு . அவ்வாறே ஊர்க்கிணறும் அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் பேரழகு ..  தமிழகத்தின் பல மாவட்டங்களில் நூறு அடி , ஐந்நூறு அடி தோண்டினாலும் கிடைக்காத தண்ணீர் பத்து அடி தோண்டினாலே பொங்கி ஊறும் குளிர்ச்சியான நிலப்பரப்பு எங்க ஊர். இந்த தண்ணீருக்காகவே  வாக்கப்பட்டு வந்தவர்கள் பலர்.  அதை பற்றி ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்று இவ்வாறு கூறும் .   "ஊரைச் சுற்றிலும் உப்புத்தண்ணீர்.   எங்க ஊர்க்கிணறு நல்லத் தண்ணீர் தேங்காய்த்தண்ணீர் புன்னைச்சாத்தான்குறிச்சி ,  தேடி வாங்க வாக்கப்பட .. "  எங்க ஊரில் வாக்கப்பட்டு வந்த புதுப்பெண்னை ஊர் பொது கிணற்றுக்கு அழைத்துச்சென்று . வெற்றிலையை கிணற்றில் போட சொல்வார்கள் . அந்த புதுப்பெண் அவ்வாறு கிணற்றுக்குள் ...

பேரண்டத்தின் பேராற்றல்

Image
https://youtube.com/shorts/90hmo0CFm6Q?si=Y0yQq6Hl11Ej7Mh4 .        விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் , எனக்கு என்று சில வேலைகளை ஒதுக்கிவிடுவாள் என்னவள். அதில் மிகவும் முக்கியமானது. வாஷிங்மெஷினில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் கட்டியிருக்கும் மெல்லிய கம்பியில் விரித்து உலரவைத்து எடுத்து வருவது. அதுவும் மதிய நேர உச்சிவெயிலில் காயப்போட கூடாது என்றும், அவ்வாறு காயவிட்டால் வெயில் கடுமை காரணமாக துணியின் மெல்லிய நூலிலைகள் பாதிக்கப்பட்டு துணிமணிகள் எளிதில் டர்ர்ர்ர்.. என்று கிழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்நேரம் துணிகளை உலரவைக்க அனுமதியில்லை..     அதனால் நான் எங்கள் ஊர் அருகில் இருக்கும் வங்கக்கடலின் ஆழமான பகுதியில், மீனவர்களால் பிடிக்கப்பட்ட வஞ்சரம் மீன்களை , அன்றே காயல்பட்டிணத்தின் மீன் மார்கெட்டில் இரத்தம் சொட்டச் சொட்ட வாங்கி வந்து செய்த மீன்குழம்பை வட்டிலில் கொட்டி .. சப்பு கொட்ட வயிற்றில் கொட்டிய மயக்கத்தில் இருக்கும் அந்த மூன்று மணியளவில் தான் மாடியில் அவற்றை காயப்போட கட்டளையிடுவாள். அந்த நீல நிற பிளாஸ்டிக் பக்கெட்டில் அவற்றை அள்ளிக்கொண...