Posts

கவிழ்ந்த பயணமும் கலையாத நினைவுகளும்.

Image
 அம்மா சமையல் அறையில் நெய் காய்ச்சி கொண்டு இருந்தார் . தினமும் மோர் கடைந்து சிறிது , சிறிதாக சேர்த்து வைத்த வெண்ணையை உருக்கி கொதிக்க வைத்து பொன் நிறத்தில் பொங்கி வரும் சமயம் இளம் முருங்கை இலையை உருவி போட்டதும் .பட்.. பட்.. என்ற சத்தத்துடன் முருங்கை இலை முருகியதும் அடுப்பை அணைத்து அந்த பாத்திரத்தை கொண்டு வந்து ஹாலின் நடுவில் நாற்காலியில் வைத்து மின்விசிறியை வேகமாக சூழலவிட்டு நெய்யை குளிர வைத்துவிட்டு..  "விக்னேஷ் என்ன பண்ணிட்டு இருக்க. மணி எட்டு ஆச்சு . "  என்றார் . உள்ளறையில் எனக்கு பிடித்த இளம் நீலநிற சட்டையை அயன்பண்ணிக்கிட்டே , "இதோ இப்போ குளிச்சிட்டு வந்திடறேன்.... என்று வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை நோக்கி ஓடினேன் அந்த முன்னிரவு நேரத்தில் ..         இதோ குளித்து முடித்து கிளம்பியாகி விட்டது . அப்பா தந்த பணத்தை பாக்கெட்டில் பத்திரபடுத்திவிட்டு  வேகவேகமாக கிளம்பிய  என்னை . "ஏல ! சாமி கும்பிட்டியா  ? என அம்மா கேட்க . அமைதியாக  முழித்து கொண்டு நின்ற என்னை "போ போய் சாமிகும்பிட்டு விபூதி பூசிகிட்டு போ !...

ஓலை குடிசை

Image
காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை , புல்தரைகள் வேய்ந்த கூரை வீடுகளில் தான் வாழ்ந்தனர் . இவ்வீடுகளின் சுவர்கள் குடிசையாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும் ,சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. நான் பிறந்து வளர்ந்தது பனை ஓலையால் ஆன கூரையும், செங்கலும், களிமண்ணை குழைத்து கட்டப்பட்ட அந்த மூன்று அறை மண்மாளிகையில் தான் . ஓன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மழைக்காலம் வருவதற்கு முன்பு பழைய கூரையை மாற்றி புதிய கூரை வேய்வதே அவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும் . வடக்கு மரந்தலை மாடசாமி கோவிலுக்கு அருகில் எங்களுக்கு ஒரு பனங்காடு இருந்தது . அதில் பூமியின் கற்பகதரு என அழைக்கப்படும் பனைமரங்கள் பல இருந்தன . அந்த பனைமரத்திலிருந்து ஓலைகளை வெட்டி இரண்டு நாட்கள் வாடவிட்டு. பின்பு அவற்றை நீண்ட மயில் தோகை போல நீட்டுவாக்கில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து பெரியகல்லை அதன் மீது வைத்து விட்டால் . இரண்டு நாட்களி...

" மயக்கமென்ன "

Image
சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்னால் ஆன அந்த டீக்கடை தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்ப்புறம் இப்போது சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் அமைந்து இருக்கும் இடத்தில் இருந்தது. தாத்தா காலத்தில் ஆரம்பித்த கடை அது . சுமார் 5000 சதுரடி பெரிதான கடையில் முன் பகுதியில் சிறிய பெட்டி கடையோடு இணைந்த டீ கடை இருந்த பகுதி தவிர்த்து பின்புறம் இருந்த காலி இடத்தில் , விவசாய வேலை பார்க்கும் தொழிலார்களின் மண்வெட்டி , கடப்பாரை , ஏர் கலப்பைகளும் . பொழுது சாயும் நேரத்தில் பஜாரில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் பொருட்களும் , ஆத்தூர் வெற்றிலையை நாடெங்கும் ஏற்றுமதி செய்யும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலையை பதமாக பார்சல் செய்வதற்கு தேவையான ஓலைபாய் , தாம்பு கயிறு போன்ற மூலப்பொருட்களும்   போட்டு வைத்து இருந்தனர் . அதன் பின் பகுதியில் மிகப்பெரிய முருங்கை மரமும் , அதில் சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் பழுத்து தொங்கிய கோவை பழ கொடியும் படர்ந்து இருந்தது . முதலில் என் அக்கா பெயரில் இருந்த கடை சிறிய தீ விபத்தில் சேதம் அடைந்த பிறகு விக்னேஷ்வரா டீ ஸ்டால் என்று எனது ...

போதை "ஆ" சாமி

Image
மாலை ஆறு மணிக்கு எல்லாம் தாமிரபரணி ஆற்றை நோக்கி வானத்தில் வெடி போட்டு , நையான்டி மேளம் முழங்க அம்மனுக்கு அபிஷேகம் பண்ண புனித நீர் எடுத்து வரகிளம்பினாங்க ஊர்ல இருக்கிற ஆண்களில் பெரும்பாலோனோர்  . அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசு இருக்கும் . அதற்கு முன்பு வரை ஊர்ல எல்லாரும் ஆத்துக்கு போகும் போது வீட்ல என்னை அங்கு போக அனுமதிப்பது இல்லை . இரவில் வெளிச்சம் இல்லாத ஆற்றங்கரையில் நான் தவறுதலாக ஆற்றுக்குள் இறங்கிவிட்டால் . நீச்சல் தெரிந்து இருந்தாலும் ஆழம் தெரியாத நீர் நிலைகளில் காலை விடுவது ஆபத்தானது . இதற்கு முன்பு இப்படி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன . எனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறி என்னை பயமுறுத்தி இருந்தார் அம்மா . நான் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வாய்காலுக்கு குளிக்க போவதால் என்னை  தடுப்பதற்காக கூட அம்மா அப்படி சொல்லி இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.                                ஆனால் இந்த முறை என்னை ஆற்றுக்கு போக அனுமதித்தனர்.  முதல் முறை சாமி ஆடுவ...

மறக்கமுடியாத பாடல்களும் ! அதை தொடர்புடைய நினைவுகளும் !

Image
இசையில் மயங்காதவர் யாரும் இல்லை , திரையிசை பாடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. சிலருக்கு தனிமையை கடப்பதற்கு , சிலருக்கு தனிமையை ரசிப்பதற்கு , சிலருக்கு மனதை உற்சாகமூட்டுவதற்கு , சிலருக்கு மனதை ஆற்றுவதற்கு,  சிலருக்கு உடல் களைப்பு நீங்க ,  சிலருக்கு மனக்கவலைகளை மறக்க,  சிலருக்கு மன அமைதியை கொடுக்க . என உலகில் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வகையில் இசை பிடித்திருக்கும் . அதற்கு நானும் விதிவிலக்கில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இந்த உலகின் ஒவ்வொரு தருணங்களையும் மெல்லிய இசையுடனே ரசிக்க பிடிக்கும் .அப்படி சில  பாடல்கள் சிலரையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளையும் மறக்கமுடியாத நினைவுகளாக மாற்றி இருக்கிறது மனதில்  ...        அப்பா தீவிர சிவாஜி ரசிகர் . சிவாஜி நடித்த திரைப்பட பாடல்கள் அவருக்கு பிடித்தமானது. ஒரு முறை நான் செய்த சேட்டைக்கு அப்பாவிடம் அடிவாங்கி தேம்பி , தேம்பி அழுது கொண்டே இருந்தேன் . ஒரு சில நிமிடங்களில் அப்பா நான் அழுவதை தாங்காமல் மனம் இறங்கி என்னை சமாதான படுத்த முயன்று.....

விவசாயிகளின் நண்பனை நம்பமுடிவதில்லை. . .

Image
   நீர் நிறைந்த நிலத்தில் வாழை தோட்டங்களும் , வெற்றிலை கொடிக்கால்களுமாக செழுமை செறிந்த நிலப்பரப்புகளுக்கு நடுவே அமைந்த எங்கள்  கிராமத்தை சுற்றி இருக்கும் குளிச்சியான தோட்டங்களில் தவளைகள் , வயல் எலிகள் அவற்றை உணவாக உண்ணும் பாம்புகளும் நிறைந்து இருந்தன . பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவை . அவை மனிதர்களை தேடிவந்து கடிப்பதில்லை.  அவற்றுக்கு ஆபத்து என்று உணரும் போது அவை தாக்க முயல்கின்றன. பொதுவாக பாம்புகள் மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன . வயல்வெளிகளில் பாம்புகள் எலிகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. ஆனாலும் சில நேரம் அவற்றினால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது மக்களுக்கு அவற்றை கண்டால் பயமும் , கொல்லவும் முயல்கின்றார்கள்.            சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் மெயின் பஜாரில் இருந்து எங்கள் ஊருக்கு செம்மண்கலந்து சிறு சரல் கற்களை கொட்டி அமைக்கப்பட்டு இருந்த  அந்த இருபது அ...

மனித பிணைப்பு ..

Image
     சமுகத்தில் மனிதம் மறைய காரணம் அதன் அடித்தளமான குடும்ப உறவுகள் சிதைந்தது தான். பணம் சேர்க்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.   எனக்கு எப்பொழுதும் எதையோ தலையில் சமந்தபடி ஓடுவது போல ஒர் உணர்வு ... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அந்த சுமை எனும் பணம் தேவைப்படுகிறது. அது இன்றி சமுகத்தை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது...அந்த பயம் இந்த சமுகத்திடம் இருந்தே எனக்குள் திணிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து வெளிவர இயலவில்லை..   ஆனால் இந்த பாரத்தை தூக்கிச் சுமந்து  கொண்டு என் தந்தை நடந்ததாக நினைவில்லை .. அவரும் அவரைச்சார்ந்த மனிதர்களுமாக வெகு எளிதாக இந்த வாழ்கையை வாழ்ந்திருந்தார்கள்.. பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் அவர் ஓடியதில்லை... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அவருக்கு அது தேவைப்படவில்லை . அதை விட உயர்வான மனித மனங்களை சேர்த்து வைத்திருந்தார்.  புற்று நோயின் பாதிப்பில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அப்பா . வீட்டில் சிறு சேமிப்புகளும் இல்லாத நிலையிலும் .மிகச்சிறப்பாக நடத்தி முடிந்த என் மூத்த சகோதரி...

மாப்பிள்ளை தோழர்கள் ( Groom Friends )

Image
           ஊரில் நண்பர்கள் வீட்டு திருமண விசேஷங்களில் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடக்கும் இடங்களில் நிற்காமல் அந்த இடங்களை விட்டு  500 அடி தள்ளி ஒரு கும்பல் நிற்கும் அவனுவ தான் மாப்பிள்ளையின் நண்பர்கள் . மாப்பிள்ளை முறுக்கு என்று சொல்லுவாங்கல்ல  அது மாப்பிள்ளையை விட இவனுவகிட்ட தான் ரொம்ப ஓவரா இருக்கும் . திருமணவாழ்த்து வால்போஸ்டர் ஒட்டுறது , ஊர் இளைஞர்கள் சங்கம் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துமடல் கொடுப்பது ,  வேர்க்க விறுவிறுக்க  ஓடியாடி பந்தி பரிமாறுவது என இவனுவ செய்ற அலப்பறைகள் கொஞ்சம்  வேறுரகம்.        கல்யாணத்திற்கு முந்திய நாள் இரவு ஊர் தூங்கும் நேரத்தில இந்த கும்பல் கையில் பசை வாளியும்,  தங்கள் பெயர் போட்டு அடித்த வால்போஸ்டரையும் தூக்கி கொண்டு கிளம்பும்.. ஊருக்குள்ள கல்யாணமாப்பிள்ளை வீட்டில இருந்து மணபெண்ணின் வீடு வரை ஜனம் அதிகமா கூடுற இடங்களிளையும், புதிதாக வெள்ளையடித்து விளம்பரங்கள் செய்யாதீர்கள் என்று எழுதி இருக்கும் சுவத்துலயும், ஊர்களின் பெயரை சுமந்து நிற்கும் பெயர் பலகைகளிலும் . தன்னுடன...

காலத்தினால் செய்த நன்றி

Image
 கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்த காலம் , அரசின் பொதுமுடக்க உத்தரவின் காரணமாக யாரும்   வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை . வாகனங்கள் ஓடவில்லை, அரசு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளும் ,கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அலைந்த அலைச்சல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இந்த இரண்டு வருடங்களில் நம் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய பலரை இழந்து இருக்கின்றோம். முதல் அலை வரும் போது மக்களிடம் அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. ஆஸ்பத்திரியில் தனிமை படுத்தப்பட்டவர்கள் அங்கு சென்று பாட்டு, நடனம் என குதூகலமாக பொழுதை கழித்தனர் அது போதாது என்று அவர்கள் அதை வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பி விட்டனர் . நானும் ஒன்றும் இல்லாததை அரசாங்கம் பெரிது படுத்துகின்றது என்றே நினைத்தேன், இரண்டாவது கொரோனா அலையில் உறவினர்களையும் ,நண்பர்களையும் இழக்கும் வரை .  என் வீட்டாரை ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து கொண்டே இருந்தேன். வேலை காரணமாக தூர தேசத்தில் நான் இருந்ததால் அவர்களுக்கு ஒன்று என்றால் என்ன செய்வது என்ற கவலை என்னை ஆக்கிரமித்து இருந்தது க.    ...

"கள்ளும் கற்று மற"

Image
    சங்கால இலக்கியங்களில் மதுபானம் பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. " கள்" ‍என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌"கள்" என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது.  மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன. ஊர் திருவிழாவிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காக சொந்தமாக மதுபானங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ் சமுதாயங்களில் இருந்தது .தமிழ்நாட்டின் பனங்கள்ளும் , கேரளத்தின் தென்னங்கள்ளும் மிகவும் பிரபலம் . தமிழ்நாட்டில் பனங்கள் இறக்குவது தற்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது ..       ...