Posts

அவளுக்காக ஓர் கடிதம் 💌💌

Image
       மனதில் அவளுக்குகென்றும் பல ஆசைகள் கனவுகள் இருந்திருக்கும். ஆனால் கைபிடித்தவனின் ஆசைகள் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவளின் ஆசை,கனவுகள் அனைத்தையும் மனதுக்குள் மறைத்து கொண்டாள் என்பதை விட மனதுக்குள் மறத்துப் போனாள் எனலாம் .  இந்த சமுகத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கிகாரம் அவரிடம் இருக்கும் பணத்தை வைத்தே இருக்கிறது என்பதை வாழ்க்கையில் பலதடவை உணர்ந்திருந்ததனால் உண்டான சமூகத்தின் மீதான வன்மத்தினால் பணத்தின் மீது பற்று வைத்து , மான அவமானங்களை கடந்து வேக ,வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன். அந்த ஓட்டம் திரைகடலைத் தாண்டி சென்றிருந்தது.. நான் அவளை விட்டு புறத்தே தூரமாக தள்ளி இருக்க , அவள் அங்கே அகத்தே மனதால் மறித்து கொண்டிருந்தால் .. எங்கள் தலைவன் தலைவி வாழ்கையில் கூடல்கள் குறைந்து ஊடல்கள் நிறைந்திருந்தது. அதனை அறிந்தாலும் அவள் மனதுக்கு மருந்திடும் மனம் தான் எனக்கில்லை.. இதனால் நான் இழந்தது வாழ்க்கையில் மிக முக்கியமான எத்தனையோ அழகான தருணங்களை . வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன் என்று சொல்வதை விட கடத்திகொண்டிருந்தேன் என்பதே சரியாக இருக்கும் .....

குழந்தை இலக்கியம்

Image
"முடிவற்ற  உலகங்களின்  கடற்கரையில் குழந்தைகள் கூடுகின்றன . எல்லையற்ற ஆகாயம் மேலே  சலனமற்று இருக்கிறது . முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொணடும் ஆனந்தக் கூத்தாடிக் கொணடும் குழந்தைகள் கூடுகின்றன. குழந்தைகள் தங்கள் வீடுகளை மணலினால் கட்டுகின்றன; வெறும் சிப்பிகளை வைத்துக்கொண்டு விளையாடுகின்றன; உலர்ந்த சருகுகளைக் கொண்டு ஓடம் முடைகின்றன ; அகண்ட ஆழ்ந்த கடலிலே ஆனந்தமாக அவற்றை மிதக்க விடுகின்றன. "  - தாகூர்     எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று அனைவரும் எண்ணி எண்ணி மகிழும் நம் குழந்தை பருவத்தை போல இப்போது இருக்கும் குழந்தைகளின் நிலை இல்லை என்றே நினைக்கின்றேன் கொட்டாங்குச்சி, பட்டம் , ஓலை காத்தாடி, களிமண்ணு, பால்சிப்பி,பானை சட்டி , உடைமரப் பூ, ஊமத்தம்பூ, பொய் கடுகு , பனங்காய் , தென்னை மட்ட, வாழைதண்டு ,பொடி தட்டை, சீகரெட் அட்டை , தீப்பெட்டி மட்டி , தகர டப்பா ,  பட்டுப்பூச்சி,  தட்டான்பூச்சி , தண்ணிப்பாம்பு, தாவும் தவளை , காட்டுச்செடி, காக்கா முட்டை , ஓணான்,  அணில் கூடு , கொக்கு குஞ்சி , ஓடை நத்தை , வயல் வரப்பு , தோட்டம...

எங்க ஊர் பெரிய வாய்க்கால்

Image
தமிழ்நாடு வெப்ப மண்டலத்தின் பகுதியாகும் . அதன் காரணமாக தமிழர்கள் நீராடும் வேட்கையுடையவர்கள் . சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் கண்மாய்களிலும் குளங்களிலும் கால்வாய்களிலும் குளித்தலில் ஆர்வம் காட்டுகின்றனர். சைவ , வைணவ பெருஞ்சமய நெறிகள் கிளர்ந்தெழுந்தபோது அவை நாட்டார் மரபின் வலிமையான அடிக்கூறுகளை தன்வயமாக்கிக் கொண்டன. அவற்றில் ஓன்று நீராடல் ஆகும் , வெப்பமண்டல மனிதர்களை போலவே அவர்கள் வழிபடும் சிவன் , திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளி(ர்)க்கின்றன.                      'குளித்தல்' என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும் . குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள் ; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல் ' என்பதே அதன் பொருளாகும் . 'குளிர்த்தல் ' என்ற சொல்லையே நாம் குளித்தல் எனத் தவறாகப் பயன்படுத்துகிறோம்.     தமிழகத்தில் பெரும்பான்மையான உழைக்கும்...

நடையில் பயின்றது..

Image
உடல் எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யுங்கள் , இல்லையென்றால் உடல்நிலையில் தேவையற்ற தொந்தரவுகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும் என்ற மருத்துவரின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக கைப்பேசியில் அலாரம் வைத்து அதிகாலை 7 மணிக்கெல்லாம் பாதி தூக்கத்தில் விழித்து , வாக்கிங் போவதற்க்கென வாங்கி வைத்திருந்த ஷூவை எடுத்தேன், அது பதிமூன்றாம் நம்பர் வீடு என்ற பேய் படத்தில் வரும் பாதாள அறையை அப்போது தான் திறப்பது போன்று ஓட்டடையும் தூசுமாக இருந்தது .. அதை எடுத்து வேண்டா வெறுப்பாக கஷ்டப்பட்டு துடைப்பதற்குள் நன்கு வியர்த்து விட , ஆகா இதுவே பத்தாயிரம் காலடிகள் நடந்துபோல இருக்கே, இதுக்கு மேல் எதற்கு நடக்க வேண்டும் , தினமும் ஷூவை எடுத்து நன்றாக துடைத்தாலே போதும் போலவே , இதுவே பெரிய உடற்பயிற்சியாக இருக்கு இதற்கு மேல் எதுக்கு நடைபயிற்சி என்று மனது அலைபாயந்த போது... சோம்பேறி ... சோம்பேறி என்றது உள்மனது, என்னை விட அதுக்கு தான் என் உடல்நலனை காப்பதில் அக்கறை அதிகம்..  சரி.. சரி .. திட்டாதே என்று உள்மனதை சமாதனபடுத்திக்கொண்டு ..  வேண்டா வெறுப்பாக ஷூவை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் சில்ல...

பெய்யென பெய்த மழை.

Image
    வெகுநாட்களுக்கு பிறகு , எனது ஊரில் இன்று நல்ல மழை பொழிந்திருக்கின்றது ,  வசந்தத்தை வரவேற்கும் வீதமாக, இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை எனது ஊர் மண்ணை குளிர்ச்சிபடுத்தி இருக்கிறது.  மனது குளிர்ந்ததடா கண்ணே !!  என்று "மனோகரா " படத்தில் ஒரு வசனம் வரும். அது போல எங்க ஊர் மண்ணோட சேர்ந்து என் மனமும் குளிர்ந்து போச்சு .    இந்த வருடம் மழை பொய்த்ததால் பூமி வறண்டு போனது , அக்னி வெயில் முடிந்து இரண்டு மாதங்களாகியும் வெக்கை குறையவில்லை , ஆற்றிலும் , ஊற்றிலும் தண்ணீர் இல்லாமல் மரங்கள் வாடி வதங்க தொடங்கியது. அதன் தாக்கம் வீட்டிலும் அடிக்கத் ஆரம்பித்தது...     முன்பெல்லாம் என் மனைவியை வேடிக்கையாக சீண்டுவதற்காக , அவர் பிறந்த ஊரை குறை சொல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தேன் .  " எங்க ஊரப்பாரு அந்த பக்கம் வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு ,   இந்த பக்கம் நீர் நிறைந்திருக்கும் குளத்தை பாரு,  பத்து அடி பள்ளம் தோண்டுனா பொங்கி வரும் ஊத்தைப் பாரு ,  வாய் கொப்பளிப்பதற்கே பெரிய வாய்காலு, ஊரை சுற்றிலும் தோட்டம் ,  எங்கு...

" நாய்குட்டி ..

Image
                  கிளைகள் பரப்பி பசுமை விரித்து படர்ந்திருந்த அந்த பெரிய புளியமரம் ,  அந்த கிழவியின் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்தது. புளியமரத்தின் கிளைகளில் கொக்குகள் பல கூடுகட்டி முட்டையிட்டு இருந்தது ,சில கூடுகளில் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்து கத்திக்கொண்டிருந்தன . அந்த மரத்தின் அடிவாரத்தில் நான்கு கவக்கம்பு அடித்து , பனை வளையை சதுரமாக வைத்து அதன் மேல் அவுத்தி , சவுக்கு மரத்துண்டுகளையும் பனை , தென்னை மட்டைகளையும் வைத்து  அடுக்கப்பட்டிருந்த விறகு கூடத்தின் அடியில் தான் அந்த தெருவை சுற்றும் தெரு நாய் செவப்பி சிறிய பள்ளம் தோண்டி , அதில் என்னுடன் சேர்த்து  ஐந்து பேரை பெத்து போட்டிருந்தால்..நாங்கள் ஐந்து பேரும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தோம்..  நாங்கள் இருந்த இடத்தை சுற்றி தென்னங்கிடுவை வைத்து அடைத்து வேலி போடப்பட்டிருந்தது .  அந்த கொல்லையில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன , அவற்றிற்கு  தோட்டத்தின் அருகிலேயே , கிழவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் பொது கிணற்றில் இருந்து வெளியேற...

மகளுக்கு ஓர் மடல் !!

Image
அன்புள்ள மகளுக்கு - அப்பா எழுதும் மடல் ..  என்னை மன்னிக்கவேண்டும் மகளே !        உன்னை தாமிரபரணி நீராடவும்..  வயல் இறங்கி வயல் நண்டு பிடிக்கவும் , நாற்றங்கால் நாற்றை பிடுங்கி வயல் பரவ நடவும், ஊத்தான் குத்தி ஓடும் மீன் பிடிக்கவும் .. மரம் ஏறி அணில் குஞ்சு எடுக்கவும் .. கண்ணி வைத்து பறவை பிடிக்கவும் ... ஓணான் பிடித்து தாத்தாவின் மூக்கு பொடி போட்டு விளையாடவும்.. தட்டான் பிடிக்கவும்.. வயல்வெளிகளின் வேலிகளிலும்,மரங்களிலும் தேனீக்கள் வைத்திருந்த தேனை எடுத்து சாப்பிட்டவும் , வேப்பம் மரம் ஏறி வேப்பம் பழம் சாப்பிடவும். புளியமரம் ஏறி புளியம்பழம் உழுப்பவும்.. ஆறு , கிணறு களில் வளரும் பால் சிப்பியை எடுத்து வந்து கண்ணாடி போல் பட்டைதீட்டி அவற்றில் மெழுகை வைத்து அடைத்து ஆற்று மணலில் வழுக்கும் தடம் அமைத்து பந்தையம் விட்டவும் , குளத்தில் இருந்து கரம்பல் மண் எடுத்து வந்து பைதா ( சக்கரம் ) செய்து உருட்டி விளையாடவும் , கோலிக்கா அடிக்கவும் , பம்பரம் சுற்றவும் , பட்டம் விடவும் , கில்லி அடிக்கவும் , பிள்ளையார் பந்து விளையாடவும் , காத்தாடி சுற்றவும் , ...