Posts

" காதலே உன் காலடியில் "

Image
"திருச்செந்தூர்" சூரனை வென்ற முப்பாட்டன் முருகனின் வீரத்திற்கு மட்டுமல்ல  ,  காந்தர்வம் புரிந்து அன்னை வள்ளியை கவர்ந்த காதலுக்கும் பெயர் பெற்ற  திருத்தலம் . தான்தோன்றிகளாக திரிந்தகுடிகளுக்கு தமிழர்கள் என்ற அடையாளத்தை தந்த வேட்டுவர்குடி தலைமகன். குறிப்பறிந்து சொல்லும் குறவர்குடி தலைமகளின் மீது மையம் கொண்டு விவாகம் புரிந்த கதைகள் இன்னும் தமிழக மண்ணில் வள்ளி திருமண நாடகமாக தென்மாவட்டங்களின் கோவில் திருவிழாக்களில் நடைபெற்று வருகின்றன..  இவ்வாறான சிறப்பு வாய்ந்த திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்து அங்கே இருக்கும் , பிரபலமான ஆண்கள் கல்லூரில் விலங்கியல் இறுதியாண்டு படித்து கொண்டிருந்த வேலன் தன் சிறுவயது முதல் பலமுறை முருகனின் கோவிலுக்கு சென்றிருக்கின்றான் . பாலகனாக பாலமுருகனை பலமுறை தரிசித்தவன். .. இன்று இளம் குமரனான பிறகு. அதே கோவிலுக்கு பொழுதை குதூகலமாக கழிக்க எண்ணி , பாட்டனின் பாதத்தில் பட்டு பரவசமாகும் பரந்து விரிந்த நீீீலவண்ண வங்கக்கடலில் நீராட கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு வகுப்பு தோழர்களுடன் வந்திருந்தான்,  வேகமாக வீசும் காற்றின் ஜதிக்கு ...

"வாட்டர் டேங்கும் விலாங்கு மீனும்""

Image
காலையில் கடைக்கு கிளம்பிய தாத்தாவிடம் அடம்பிடித்து வாங்கிய ஐம்பது பைசாவில், ஊருக்குள் இருந்த கடைக்கார தாத்தாவின் கடையில் அவரை படாத பாடுபடுத்தி , அவரிடம் திட்டு வாங்கி கொண்டு பார்த்து பார்த்து வாங்கி வந்த கண்ணாடி கோலிகுண்டுகளை எல்லாம் விளையாடி தோற்கும் நிலையில் இருந்த என்னிடம் வந்த என் நண்பன் மெதுவான குரலில்.  - " ஏல மீன்பிடிக்கப் போறேன் வர்றியா" என்றான்.  " எங்க போய் மீன் பிடிக்கபோற" என்றேன் .  - "வாட்டர் டேங்குக்கு போய் மீன் பிடிக்கலாம் " என்றான்.  "வாட்டர் டேங்க்" என்றவுடன் எனக்கு சற்று தயக்கமாக இருந்தது .   அது ஊரில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் அமைந்து இருந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீரேற்றும் பகுதி . தாமிரபரணி ஆற்றில் இருந்தும் ,ஆத்தூரான் கால்வாயில் இருந்தும் இராட்சத மோட்டார் மூலமாக உரிஞ்சப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆத்தூர் , ஆறுமுகநேரி , காயல்பட்டினம் , வீரபாண்டிபட்டினம் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம...

"தில்லையில் அம்பலம்"

Image
பாண்டிச்சேரியில் மூன்று மாதகாலம் தொழிற்பயிற்சிக்காக எங்கள் கல்லூரியில் இருந்து நண்பர்கள் பனிரெண்டு பேர் சென்றிருந்தோம். முதன் முறையாக குடும்பத்தை விட்டு தொலைதூர பயணம் . முதல் சில நாட்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத தனிமை என்னை வாட்டி வதைத்தது. நாட்கள் போகப்போக நண்பர்களின் ஆதரவின் காரணமாக சகஜமானேன் . பிறகு விடுமுறை தினங்களில் நானும் நண்பர்களும் பாணடிச்சேரியையும் அதை சுற்றி இருக்கும் இடங்களையும் சுற்றி பார்த்தோம் . ஒவ்வொரு வாரமும் விடுமுறை கழிந்தபின் அடுத்த வார விடுமுறைக்காக காத்திருக்கலானோம்.. இதோ அடுத்த வாரம் வேலைக்கான கால அட்டவணை வெளியாகி விட்டது . வரும் வாரம் புதன்கிழமை எனக்கும் என் நண்பன் ராம்குமாருக்கும் விடுமுறை . இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து அறுபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த புகழ் பெற்ற தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசித்து வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு இன்னும் நான்கு தினங்கள் இருந்தன . ஆனாலும் தினம் தினம் நண்பர்களிடம் அங்கு போவதை பற்றி சிலாகித்து பேசிவந்தேன் . எப்போதும் "தில்லையம்பல நடராஜா" என்ற பாடலை முனு முனுத...

"பிரியாணி"

Image
  பிரியாணி எனக்கு அறிமுகமானது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் தெற்கு ஆத்தூர் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தான் . அன்று பஜார் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் . பஜார் வியாபாரிகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும் , சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்கவும் கடைகாரர்கள் அனைவரும் கூடும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொள்ளாத கடைக்காரர்கள் கூட கடைசியாக கூட்டம் முடிந்தவுடன் ஆத்தூர் தாஜ்மஹால் ஓட்டலில் ஆர்டர் செய்து இலவசமாக வழங்கப்படும் பிரியாணியை வாங்க ஆவலாக வந்து இருப்பார்கள் . "தாஜ்மகால்" என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அன்பு , லவ் , பியார் , காதல்னா , ஆத்தூர்காரங்களுக்கு "தாஜ்மகால்" என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்கும் .சீரக சம்பா அரிசியோடு ஏலக்காய் , பட்டை , கிராம்பு போன்ற வாசனை பொருட்களையும், சிக்கனையும் , நெய்யையும் ஊத்தி ஊரே மணக்கும் வாசனையுடன் செய்த தாஜ்மகால் ஓட்டல் பிரியாணி அவ்வளவு ருசியாக இருக்கும் . அந்த பிரியாணியை நியூஸ் பேப்பரை விரிச்சி வைச்சி அது மேல இளம் தலை வாழையிலையை போட்டு சிக்கனைய...

செம்மறி ஆடு 🐏

Image
  கோடை காலத்தில் நீர்வற்றி இருக்கும் ஆத்தூர் குளம் , ஆத்தூரை சுற்றி இருக்கும்  குளங்கள் மற்றும் அறுவடை முடிந்த வயல்வெளிகளுக்கு செம்மறி ஆடுகளை தூத்துக்குடி நகரத்தை தாண்டி இருக்கும் வானம் பார்த்த கரிசல் பூமியில் இருந்து மேய்ச்சலுக்காக பத்திக்கிட்டு வருவாங்க. நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒன்றன்பின் ஒன்று இடித்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புழுதியை கிளப்பியவாரு கீதாரி கையில் வைத்து இருக்கும் தொரட்டி கம்புக்கு அடிபணிந்து மந்தை மந்தையாக அணிவகுத்து செல்வதே அழகாக இருக்கும் . செம்மறி ஆடுகளை எங்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் யாரும் வளர்ப்பதில்லை . செம்மறி ஆட்டுகிடாக்களை வைத்து நடக்கும் "கிடா முட்டு" போன்ற விளையாட்டு பந்தயங்கள் எங்கள் பகுதியில் பிரபலம் இல்லை . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கள் பகுதியில் இறைச்சிக்காக மட்டுமே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன . வெள்ளாட்டின் இறைச்சியோடு ஒப்பிடும் போது செம்மறி ஆட்டின் இறைச்சி சற்று கடினமாகவும் , வாடையுடனும் இருப்பதால், வெள்ளாடுகள் மட்டுமே எங்கள் பகுதிகளில் பெருமளவு வளர்க்கப்படுகின்றன....

பொய்க்காத பாசம் !

Image
அந்த வருடம் வான் பொய்த்ததால் , நீர்நிலைகள் வறண்டு , நிலம் வெடித்து போனது. எங்கள் தோட்டத்தில் வாழைகள் எல்லாம் வாடி வதங்கும் நிலை . ஆழ்துளை கிணற்றில் இருந்து பம்பு செட் மூலமாக வாழை தோட்டத்தின் பட்டங்களில் , எவ்வளவு நீரை இறைத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போலானது. வளர்ந்து விட்ட வாழைகளை வாட விட மனம் இல்லாமல் .. டீசல் வாங்கி, வாங்கி பம்பு செட்டுக்கு ஊற்றி, ஊற்றுநீரை இறைத்து கொட்டி கை காசு கரைந்தது தான் மிச்சம் , நொய்ந்து போன வாழையில் ஊட்டம் இல்லை.  வாழைதோட்ட காண்களில்  நீர் தேங்காமல் வாழை செழிப்பாக வளரப்போவது சாத்தியமில்லை என்றானது.. ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் மற்றும் வாழை விவசாயிகள் சங்கங்கள் மூலமாக அரசாங்கத்தை வேண்ட பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் இருந்து சிறிது தண்ணிரை திறந்து விட்டது அரசு . திருவைகுண்டம் அணையில் இருந்து தென்கால்வாய் வழியாக பாய்ந்து வந்த தண்ணீர். அதுவரை வறண்டு காய்ந்து இருந்த வாய்காலில் விழுந்துகிடந்த மரத்தின் இலை , கிளைகளை எல்லாம் சேர்த்து இழுந்து வந்து கொண்டுடிருந்தது.           கடையில் வியாபாரம்...

" துன்பம் தரும் அழகான நினைவுகள் "

Image
நான் விமானநிலையம் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த அந்த டாக்சி நான்  குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக நாங்கள் இருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில்  வந்து நிற்கும் என நான் எதிர்பாக்கவில்லை. அவ்வாறு வந்தது சற்று ஏமாற்றமாகவும்,  வருத்தமாகவும் இருந்தது . இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றியது . அது வரை உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்த எனக்குள் ஏதோ ஒரு வகையான இறுக்கம் படர்ந்து என் சீரான சுவாசத்தை தடுக்க கண்களில் நீர் முட்டியது . உறவினர்களின் முன் என் பலவீனத்தை வெளிகாட்ட மனம் இல்லாமல் . கண்ணில் படர்ந்த நீர் வெளியே வரும் முன்பாக இமைகளால் அணை போட்டு மூச்சை ஒரு முறை ஆழ்ந்து இழுத்து விட்டு  என்னை ஆசுவாசப்படுத்தி கொண்டேன். அந்த பெரிய மண்டபத்தின் குளிரூட்டிகள் அணைக்கப்பட்டதால்,  வெளியில் வாட்டி வதைத்த சென்னை வெயிலின் தாக்கம் மண்டபத்திற்குள் பரவ , வெக்கை தாங்க முடியாமல்,  கோழியின் இறக்கைக்குள் பாதுகாப்பை நாடும் கோழி குஞ்சுகளை போல ஆங்காங்கே சுழன்று கொண்டு இருந்த மின்விசிறியின் இறக்கையின் கீழ் குழுமி...