Posts

கடவுளின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் பங்கு.

Image
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழி கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் அறிவுப்புரட்சி உண்டானது . மொழி இல்லையென்றால்  மனிதனும் ஒரு  விலங்கை போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பான்.  விலங்குகளுக்கும் மொழி இருக்கின்றது . அதன் மூலம் நிகழ்காலத்தில் ஒரு சிங்கம் வருவதை எச்சரிக்கை ஒலி எழுப்பி தன் சக விலங்குகளை பாதுகாக்கமுடியும். ஆனால் மனிதர்களை போல  நிகழ்காலத்தில் மட்டும் அல்ல எதிர்காலத்திலும், இறந்தகாலத்திலும்  நடப்பவற்றை, நடக்கபோவதை, நடந்ததை கற்பனை கலந்து கூறமுடியாது. மனிதனால் அங்கே ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் அருகில் ஒரு சிங்கத்தை பார்த்தாக கூறமுடியும் . ஆனால் விலங்குகளால் அது முடியாது. அந்த திறன் தான் மனிதனின் மொழிக்குரிய தனித்துவமான அம்சமாகும். மனிதன் தனக்கு தெரிந்தவற்றை ,தான் ஒரு போதும் பார்த்திராத, தொட்டிராத, முகாந்திரமில்லாத ஏராளமான விஷயங்களை பற்றி பேசுவதற்கு மனிதர்களால் முடியும் .முன்பு ஒரு சிங்கம் வருகின்றது என்று எச்சரிக்கை மட்டும் தான் கூறமுடிந்தது.  அறிப்புரட்சியின் விளைவாக சிங்கம் தான் நம் இனத்தின் காவல் தெய்வம் என்று கூறுவதற்கான திறனை ...

எங்கள் ஊர் மாசி மாத மகா சிவராத்திரி .

Image
தமிழ்நாட்டின் சமூக பண்பாட்டை பேசிய அறிஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்த மதுரையே தமிழ்நாட்டின் பண்பாடு என்பதோடு  அமைந்து விடுகின்றனர் . ஆயினும் மதுரைக்கு தெற்கே பல நூறு கி.மீ வரை தமிழ்நாடு பரந்த நிலப்பரப்பினையுடையது என்பதை போதிய அளவில் கணிக்க முயலாமல் விட்டுவிட்டனர் .          அந்த பரந்த நிலப்பரப்பில் இயற்கையின் அரணாக திகழும்  பொதிகை மலையில் உருவாகி முன்பு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்து . தற்போது தென்காசி ,திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்கள் என பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பகுதி வழியாக பாய்ந்து செல்லும் இடம் எல்லாம் பசுமையை பெருக்கி வளர்க்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியின்  கரையில் தான் பண்டைய தமிழரின் தொல் சமய,பண்பாட்டினை உள்வாங்கி வளர்ந்த சைவ , வைணவத்தின் முக்கிய திருத்தலங்களான நவ கைலாசமும் , நவ திருப்பதியும்  அமைந்துள்ளன. அந்த பழைய மதங்கள் காட்டும் ,  கார்த்திகை , திருவாதிரை , மாசிகளரி மற்றும் மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம் , சித்திரை பிறப்பு , வைகாசி விசாகம் , ...

தீபாவளியும் , விநாயகர் சதுர்த்தியும் நான் அறிந்தது .

Image
எனக்கும் என்னவளுக்குமான சிறு  உரையாடல் . என்னவள் சென்னை அருகில் உள்ள மடிப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர் . தற்போது இந்த பகுதி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு பகுதியாக உள்ளது  . என்னவள் அவருடைய  தோழியிடம் தான் சென்னையில் இருந்த வரைக்கும் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடியதாகவும். தற்போது  ஆத்தூரில் ஒவ்வொரு வருடமும்  விநாயகர் சதுர்த்தி அன்று  களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலை வாங்க பல இடங்களில் அழைந்து திரிந்தும் அவை கிடைக்கவில்லை என்றும் கூறியதாகவும் . அதற்கு அவரின் தோழி நமது ஊரில் விநாயகர் சதுர்த்தி பிரபலமாக கொண்டாப்படுவதில்லை என்றும் கூறியதாகவும் என்னிடம் கூறி . உங்க ஊரில் எதுவுமே கிடைப்பதில்லை என்று என்னை வம்புக்கு இழுத்தார் .         நான் என்னவளிடம் விளக்கம் கூற ஆரம்பித்தேன் . விநாயகர் வழிபாடு மராட்டியத்தில் புனே நகரைச் சேர்ந்த சித்பவனப் பிராமணர் இடையே தோன்றியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . பின்னர் கீழைசாளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலை கொண்டு அங்கிருந்து தமிழ்நாட்டுக்குள் வந...

எங்கள் பண்பாடும், திருவிழாவும் , வழிபாடும் - பாகம் 2

Image
மார்கழி பிறந்தாலே உடலும், உள்ளமும் குளிர்ந்து போகும் . இரவின் முன் பகுதியில் ஆரம்பிக்கும் பனி பொழிவு மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரை தொடர்ந்து  கொண்டே இருக்கும் .ஆத்தூரில் இருந்து எங்கள் ஊர் செல்லும் பாதையின் இரண்டு  பக்கமும் வாழை தோட்டங்களும்  , வெற்றிலை கொடிக்காலும் , பனை , தென்னை மரத்தோட்டங்களுமாக பசுமை  விரிந்து கிடக்கும் . வெற்றிலை கொடிக்காலில்  அகத்தி விதை முளைத்து இரண்டு அடி உயரம் வளர்ந்து இருக்கும் . அதன் இலைகள் மீது பனி பொழிந்து சிறு,சிறு நீர்த்திவலைகளை உருவாகி இருக்கும் . அதன் மீது இளம் காலை சூரிய ஒளிபட்டு அவை பச்சை மரகதம்போல் மின்னிக்கொண்டு இருக்கும் . வாழைதோட்டங்கள் எல்லாம் நீர் தெளித்து கழுவிட்டது போல் பசுமையாக இருக்கும் . தென்னை , பனை ஓலைகளில்  இருந்து வழிந்து தரையில் சொட்டும் பனித்துளிகளை பார்த்தால் , மரத்தின் இளம் பாலைகளை சீவி விட்டால் சொட்டும் பதனீர் போல சொட்டிக்கொண்டே இருக்கும். அந்த காலை வேளைகளில்  தோட்டங்களுக்கு சென்றால் . பனித்துளிகளின் எடை தாளாமல் தலையை தனிந்து இருக்கும் புற்களையும...

எங்கள் பண்பாடும், திருவிழாவும் , வழிபாடும் - ( நவராத்திரி , திருக்கார்த்திகை, கிழவி நோன்பு.

Image
                பருவகாலங்கள் இளவேனில் காலம் , முதுவேனில் காலம் ,கார் காலம் , கூதிர் காலம் , முன் பனி காலம் , பின் பனி காலம் என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன .  அந்தந்த கால நிலைக்கு ஏற்றவாறு அந்த நிலப்பரப்பில் உள்ள தெய்வங்களுக்கு மக்கள் விழா எடுப்பது வழக்கம் .  தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்கள் புவியியல் அமைப்பில் தென்மேற்கு , வடமேற்கு  பருவமழையினை பெறுகின்ற நிலப்பகுதியாகும். எனவே மழை குறைவாக பொழியும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி  உத்திர நாளே நாட்டார் ( குலதெய்வம் )  வழிபாட்டுக்குரிய நாட்களாக இருக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மாசி மாத மாசிகளரி  நாளை  நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக வைத்துள்ளனர். தமிழர்களின் திருவிழாக்கள் முழுநிலவு நாட்களிலேயே! கொண்டாடப்பட்டு வந்தன . தை பூசம் , மாசி மாதத்து சிவராத்திரி , சித்திரை மாதத்து  சித்திரை திருவிழா , வைகாசி மாதத்து விசாகம் போன்ற இந்த முழு நிலவு நாட்களே தமிழர்களின் திருவிழாநாளாகும் . இன்றும் தமிழகத்தின் கிராமங்களில் தமிழர்களின் தொல் பண்பாட...

அப்பாவின் கண்டிப்பும், அன்பின் வெளிப்பாடே !

Image
                                                  அப்பா மிகவும் அன்பானவர் அதே நேரம் கண்டிப்பானவர்.  காலையில் கடைக்கு செல்பவர் , இரவில் நாங்கள் உறங்கும்  நேரத்தில் தான் வீட்டிற்கு வருவார்.  ஆதலால் அவரிடம் அதிகமாக தப்பு செய்து மாட்டி கொண்டது கிடையாது . வீட்டில் அம்மா தான் எங்களுக்கு படிப்பு சொல்லி தருவதில் இருந்து , எங்களை கண்டிப்பது வரைக்கும் . நான் வீட்டுக்குள் ஒரு நாளும் அடங்கி இருந்தது இல்லை .  நேரம் காலம் தெரியாமல் தெருவில் விளையாடுவதும் ஊரைச் சுற்றி வருவதும் வாடிக்கை . இப்பொழுது போல்  24 மணி நேரமும் தொலைக்காட்சிகள்  பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாத காலம் ,  அது ஊருக்குள் நாங்கள் எங்கு அழைந்து கொண்டு இருந்தாலும் , யாராவது ஒருவர் நம்மை கண்காணிக்கும் வகை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருந்தது. அதனால் ஊருக்குள் நாங்கள் சுதந்திரமாக சுற்றி வந்தோம் . சுதந்திரம் இருந்தாலும் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய ச...

மழைக்காட்டுக்குள் நடைப்பயிற்சி !🏃‍♂️

Image
         சிங்கப்பூரின் 56 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . கொரோனா காரணமாக அணிவகுப்பு நிகழ்ச்சிகளை யாருக்கும் நேரடியாக கண்டுகளிக்க அனுமதி இல்லை . ஆதலால் என் அண்ணன் என்னை அவர்களுடன் நடைபயிற்சியில் கலந்து கொள்ள அழைத்தார்கள் . எனக்கும் விடுமுறை ஆதலால் அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். நாங்கள் நடைபயிற்சி கொள்ள அண்ணன் தேர்ந்து எடுத்த இடம் மெக்ரிட்சி நீர்தேக்கம் ஆகும் .              உயரமான கட்டிடங்கள் , அவற்றுக்கு இடையில் சாலைகளில் வேகமாக செல்லும் புதுப்புது உயர்ரக கார்கள் , அவற்றின் கீழ் பல அடுக்கு  சுரங்கங்களில் விரைவாக பயணிக்கும் தானியங்கி இரயில்கள் என மேம்பட்ட இயந்திரத்தனமாக காட்சி அளிக்கும் சிங்கப்பூரில் .. இவை எதுவும் இல்லாமல் வாகனங்களின் ஓசை சிறிதும் இன்றி சிள்வண்டுகளின் ரிங்காரத்தின் ஓசைகள் மட்டும் கேட்டு கொண்டு இருக்கும் , மிகப்பெரிய மழைக்காடுகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு அமைந்துள்ள சிங்கபூரின் மிகப்பெரிய நீர்தேக்கம் தான் முன்பு  தாம்சன் நீர்தேக்கம்,  ...